மத்தியப்பிரதேசம் ஆளுநர் பொறுப்பு... உபி ஆளுநர் ஆனந்தி பென்னிடம் ஒப்படைப்பு!!
லக்னோ: மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் காலமானார். அந்த மாநிலத்தின் கூடுதல் பொறுப்பு உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென்னிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 11 ஆம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த லால்ஜிக்கு வயது 85. இவரது மரணத்தை இவரது மகன் அஷுதோஷ் டாண்டன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாபுஜி காலாமானார் என்று குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய காரணங்களால் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.
இதற்கு முன்னதாக லால்ஜியின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்த மெதந்தா மருத்துவமனை, வென்டிலேட்டரில் இருக்கும் லால்ஜி உடல் நலம் தேறி வருகிறார் என்று தெரிவித்து இருந்தது.

இவரது மரணத்துக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சமூகத்துக்கு களைப்பில்லாமல் பணியாற்றியவர் லால்ஜி. அரசிலமைப்பு சட்டத்தை நன்கு அறிந்தவர். அடல்ஜியுடன் நெருங்கிய நீண்ட நாட்கள் தொடர்பில் இருந்தவர். இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications