வரலாற்று சாதனை படைத்த உத்தரப் பிரதேசம்.. எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு இதுவரை ரூ.50 ஆயிரம் கடன் உதவி
லக்னோ: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்கி உத்தரப் பிரதேச அரசு வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த அளவுக்கு வேறு எந்த மாநிலமும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கியது கிடையாது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அப்படியான திட்டங்களில் ஒன்றுதான் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் தற்போதுவரை உ.பி அரசு சுமார் ரூ.50 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியுள்ளது. இந்த அளவுக்கு வேறு எந்த மாநிலமும் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கியது கிடையாது. அந்த வகையில் இது வரலாற்று சாதனை என அம்மாநில பாஜக கூறி வருகிறது. இது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில்,
"இளைஞர்கள், பெண்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர் சுயசார்புடையவர்களாக மாற வேண்டும் என்பதே இரட்டை இயந்திர அரசின் நோக்கம். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசம் களத்தில் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் மாஃபியாக்களின் பிடியில் இருந்த இந்த மாநிலம் தற்போது முதலீடுகளுக்கு ஏற்ற அமைதியான மாநிலமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications