Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஏஎஸ் அதிகாரியை தோப்புகரணம் போட வைத்த வக்கீல்கள்! நேர்மையான அதிகாரிக்கு நேர்ந்த கதி! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியையே தோப்புக்கரணம் போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்காலர்ஷிப் ஊழலை கண்டுபிடித்ததல் 7 முறை துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளான இந்த ஐஏஎஸ் அதிகாரி யார்? அவரை ஏன் வழக்கறிஞர்கள் எதிர்த்தனர்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

உத்தர பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவர் ரிங்கு சிங் ரஹி. இவர் ஷாஜஹான்பூரில் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருகிறார்.

uttar-pradesh-ias-officer-rinku-singh-rahi-sit-ups-in-front-of-protesting-lawyers-on-his-1st-day

அப்போது அலுவலக வளாகத்தில் அவர் திடீரென்று ஆய்வு செய்ய தொடங்கினார். அப்போது கிளர்க் ஒருவர் சிறுநீர் கழித்து கொண்டிருந்தார். கழிவறையை பயன்படுத்தாமல் அவர் வளாகத்தில் சிறுநீர் கழித்தார்.

தண்டனை வழங்கிய ஐஏஎஸ்

இதனை கவனித்த ரிங்கு சிங் ரஹி அவரை அழைத்து தண்டனை வழங்கினார். கழிவறையை பயன்படுத்தாமல் பொது இடத்தை அசுத்தம் செய்ததால் அவரை தோப்புக்கரணம் போடும்படி ரிங்கு சிங் கூறினார். இதையடுத்து கிளர்க் தோப்புக்கரணம் போட்டார். இதனை அங்கு அடிப்படை வசதிகள் கோரி போராட்டம் நடத்தி கொண்டிருந்த வழக்கறிஞர்கள் பார்த்தனர்.

தோப்புக்கரணம் போட்ட அதிகாரி

அப்போது வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என்று ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங்கிடம் கூறினர். மேலும் கழிவறை வசதிகள் இல்லாவிட்டால் கிளர்க் என்ன செய்வார்? பொது இடத்தை தான் அவசரத்துக்கு பயன்படுத்துவார் என்று கூறினர்.

இதையடுத்து அவர்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததற்கு தண்டனையாக தோப்புக்கரணம் போடுகிறேன் எனக்கூறினார். அதுமட்டுமின்றி போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் முன்னிலையில் தோப்புக்கரணம் போட்டார். இதை பார்த்த வழக்கறிஞர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.

அதிகாரி சொல்வது என்ன?

இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். கழிவறைகள் சரிசெய்யப்படும். இதற்கான நடவடிக்கையை எடுப்பதாக கூறினார். இதையடுத்து வழக்கறிஞர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் தோப்புக்கரணம் போட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக ரிங்கு சிங் கூறுகையில், ‛‛கழிவறைகளை பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே நான் அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் சிலர் மறுத்து பொது வெளியை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி செய்வோரை தோப்புக்கரணம் போடும்படி கூறினேன். வழக்கறிஞர்கள் போராட்டம் செய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.அடிப்படை வசதி செய்து கொடுக்காததால் நீங்களும் தோப்புக்கரணம் போடுவீர்களா? என்று கேட்டனர். அதனால் நானும் தோப்புக்கரணம் போட்டேன். எங்கள் மீதும் தவறு இருப்பதால் இதை செய்தேன்'' என்றார்.

நேர்மையான அதிகாரி

இப்போது தோப்புக்கரணம் போட்ட ஐஏஎஸ் அதிகாரி ரிங்கு சிங் மிகவும் நேர்மையானவர். தனது நேர்மைக்காகவே பலமுறை சமூக விரோதிகள் அவரை கொல்ல முயன்றனர். இவர் 2022ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜ்ஜை சேர்ந்தவர். இவர் ஐஏஎஸ் அதிகாரியாவதற்கு முன்பு முதலில் பிசிஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். 2009ல் அவர் முசாபர்நகரரில் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியாக இருந்தார்.

7 முறை துப்பாக்கிச்சூடு

அப்போது ரூ.100 கோடி ஸ்காலர்ஷிப்பில் முறைகேடு நடந்ததை கண்டுபிடித்தார். இதையடுத்து சமூக விரோதிகள் அவரை தாக்கினர். 7 முறை அவரை துப்பாக்கியால் சுட்டனர். முகத்தை சிதைத்தனர். ஒரு கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சையில் மறுபிறவி எடுத்தார். அதன்பிறகும் கூட அவர் தனது நேர்மையை விட்டு கொடுக்காமல் நேர்மையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது அடிப்படை வசதிகள் இல்லை. இதற்கு அதிகாரிகள் தான் காரணம் என்று சொன்னவுடனே ரிங்கு சிங் தன் மீது தவறு இருப்பதாக நினைத்து வழக்கறிஞர்கள் முன்பு தோப்புக்கரணம் போட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+