Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதலனுடன் உல்லாசம்.. கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைக்க துணிந்த மனைவி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மேகாலயாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் திருமணமான ஒரே வாரத்தில் கணவரை கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம், ஜார்க்கண்டில் திருமணமாகி 36 நாட்களே ஆன நிலையில் மனைவியே கணவனுக்கு கறிக்குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, காதலனுடன் சேருவதற்காக கணவனுக்கு சோற்றில் விஷம் வைத்துக் கொலை செய்ய முடிவெடுத்த மனைவியை கணவனே காதலனுடன் சேர்த்து வைத்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷிக்கும், சோனம் என்ற பெண்ணுடன் கடந்த மே 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், புதுமண தம்பதி மே 20 ஆம் தேதி மேகாலயா மாநிலத்துக்கு ஹனிமூன் சென்றனர். மேகாலயாவில் கணவனை மணப்பெண்ணே திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Uttar pradesh wife crime

இதைத்தொடர்ந்து, ஜார்கண்டில் தனது கணவனை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காததால் திருமணமாகி 36 நாட்களே ஆன நிலையில் கறிக் குழம்பில் விஷம் வைத்து கணவனை மனைவியே கொன்ற சம்பவம் ஜார்க்கண்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணமாகி 15 ஆண்டுகளான நிலையில், மனைவியின் காதலனுடனேயே கணவர் சேர்த்து வைத்துள்ளதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம், கோண்டா பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ் சந்திரா (42). கூலித் தொழிலாளி. ஹரிஸுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கரீஷ்மா (36) என்பவருடன் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கரீஷ்மாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, ஹரிஸ் சந்திராவுக்கும், கரீஷ்மாவுக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால், ஹரிஸ் சந்திராவுக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கம்போல ஹரிஸ் சந்திரா வேலைக்காக வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், வீட்டின் ஒரு பகுதியிலேயே மறைந்து கொண்டு கரீஷ்மாவை கண்காணித்துள்ளார்.

கரீஷ்மா தனது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் கரீஷ்மாவின் வீட்டிற்குள் சென்றதோடு மட்டுமல்லாமல் இருவரும் தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர். கரீஷ்மா தனது காதலனுடன் சேர்ந்து ஹரிஸுக்கு சோற்றில் விஷம் வைத்துக் கொலை செய்யவும் முடிவு செய்துள்ளார். இதைப் பார்த்த ஹரிஸ் சந்திரா அங்கிருந்து வெளியில் கிளம்பியுள்ளார்.

எப்போதும்போல வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதுபோல இரவில் ஹரிஸ் ச்திரா வந்துள்ளார். அப்போது, கரீஷ்மா தான் சமைத்து வைத்திருந்த உணவை ஹரிஸுக்கு பரிமாறியுள்ளார். அப்போது, அந்த உணவில் விஷம் கலந்திருப்பதைத் தெரிந்துகொண்ட ஹரிஸ் சாப்பாட்டு தட்டை வீசி எறிந்துள்ளார். பின்னர் ஊர் பஞ்சாயத்தை கூட்டி தகவலை தெரிவித்துள்ளார்.

பின்னர், தனது மனைவியை கரீஷ்மா காதல் உறவில் இருந்த சிவராஜுடனேயே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிலையில், கரீஷ்மா தரப்பினர் இந்த திருமணம் கட்டாயப்படுத்தப்பட்டு நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கரீஷ்மா தனது மகளுடனும், ஹரிஸ் சந்திரா 2 மகன்களுடன் பிரிந்து வீட்டிற்குச் சென்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+