மனைவி வேண்டாம்.. மாமியாருடன் உல்லாசம் அனுபவித்த கூலி தொழிலாளி.. கடைசியில் இப்படி ஆகிடுச்சே

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மாமியார் உடனான கள்ளக்காதலை கண்டித்து கூலி தொழிலாளியை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் கோபமான கூலி தொழிலாளி மாமியார் உடனான கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பதாக கருதி மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமோத். கூலித்தொழிலாளி. இவருக்கும் சிவானி என்ற பெண்ணுக்கும் கடந்த 2018 ம் தேதி ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணம் ஆன புதிதில் கணவன் - மனைவி மகிழ்ச்சியாக இருந்தனர். இவர்கள் 2 பேருக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

uttar-pradesh-man-kills-wife-after-alleged-affair-with-mother-in-law

இதற்கு முக்கிய காரணம் பிரமோத்தின் கள்ளக்காதலாகும். அதாவது பிரமோத் அடிக்கடி மனைவி சிவானியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அப்போது பிரமோத்துக்கும், அவரது மாமியாருக்கும் (சிவானியின் தாய்) இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பிரமோத் தனது மனைவி சிவானியை விட்டுவிட்டு அடிக்கடி மாமியார் வீட்டுக்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்துள்ளார். மேலும் இருவரும் அவ்வப்போது வெளியிடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். மாமியார் - மருமகன் என்பதால் யாருக்கும் பெரிய அளவில் சந்தேகம் வரவில்லை. ஆனால் சிவானிக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் கணவர் பிரமோத்தின் நடத்தையை அவர் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.

அப்போது தான் தனது தாயுடன் கள்ளக்காதல் இருப்பதை அவர் அறிந்து அதிர்ச்சியானார். பிரமோத் தனது மாமியாருடன் நெருக்கமாக இருப்பதை செல்போனில் போட்டோவாக எடுத்து வைத்துள்ளார். அது சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியதால் பார்த்து சிவானி மிரண்டு போனார். இதனால் அவர் தனது கணவர் பிரமோத் மற்றும் தாயிடம் சண்டை செய்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் பேசி சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனாலும் கூட பிரமோத் தனது மாமியாருடனான கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் அடிக்கடி சிவானிக்கும், பிரமோத்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது. இதனால் கோபமான பிரமோத், மாமியார் உடனான கள்ளக்காதலை தொடர வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால் மனைவி சிவானி உயிருடன் இருந்தால் சாத்தியமாக வாய்ப்பில்லை என்று நினைத்தார்.

இதனால் மனைவி சிவானியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி சில நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே மீண்டும் இந்த விவகாரத்தில் பிரச்சனை வெடித்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரமோத், சிவானியை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தார். அதன்பிறகு அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரமோத்தை தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் சிவானியின் தாய்க்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+