Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குற்றவாளி.. தீர்ப்பு வந்ததும் கோர்ட்டில் இருந்து எஸ்கேப் ஆன பாஜக அமைச்சர்.. உ.பியில் விசித்திர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூர் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் அம்மாநில அமைச்சர் ஒருவர் நீதிமன்றத்தை விட்டு திடீரென எஸ்கேப் ஆகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1991ல் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக பதியப்பட்ட வழக்கில், அம்மாநில அமைச்சர் ராகேஷ் சச்சன் குற்றம் சாட்டப்பட்டார்.

இதனையடுத்து அவர் குற்றவாளி என நீதிமன்றம் வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில் அவர் ஜாமீன் பத்திரங்களை வழங்காமல் நீதிமன்றத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார்.

பேட்டி

பேட்டி

இந்த சம்பவத்தையடுத்து காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ஆனால் தன்னுடைய தீர்ப்பு வருவதற்கு முன்னரே தான் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக அமைச்சர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே தான் குற்றவாளியா? இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதை தான் மதிப்பதாகவும் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இவர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் இன்று ஆஜராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளக்கம்

விளக்கம்

"சம்பவத்தன்று காலை 11 மணியளவில் நீதிமன்றத்தை அடைந்தேன், எனக்கு வேறு இடங்களில் மற்றுமொரு சந்திப்பு இருந்ததால் வழக்கு விசாரணையை வேகப்படுத்த வேண்டும் என்று கோரினேன். ஆனால் விசாரணைக்கு தாமதமாகும் என வழக்கறிஞர் தெரிவித்ததால் நான் அங்கிருந்து சென்றுவிட்டேன். இதன் பின்னர் நான் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அதன்பின்னர்தான் இந்த தீர்ப்பு குறித்த விவரங்களை அறிந்துகொண்டேன்" என சச்சன் கூறியுள்ளார்.

தப்பி ஓட்டம்

தப்பி ஓட்டம்

ராகேஷ் சச்சன் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்துவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நடுத்தர, சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மற்றும் காதி துறை அமைச்சராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு தாவினார். இந்நிலையில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் இவர் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் நீதிமன்றத்திலிருந்து தப்பியோடிவிட்டார் என சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

 வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இந்நிலையில் கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டங்களில் தான் பங்கேற்ற புகைப்படங்களை டிவிட்டரில் பதிவிட்ட ராகேஷ், தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறியது தொடர்பாக காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், விசாரணை முடிந்ததும், நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று கான்பூர் மூத்த போலீஸ் அதிகாரி ஏபி திவாரி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+