லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைமை செயலகத்தில் பெண்ணுக்கு டார்ச்சர்.. அதிகாரியை தட்டிதூக்கிய போலீஸ்.. உ.பி. ஷாக் வீடியோ

Google Oneindia Tamil News

லக்னோ: உபி தலைமை செயலகத்தில் பெண் ஒருவருக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த உயர்மட்ட அதிகாரி, இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் தலைமை செயலகம் அமைந்துள்ளது... அந்த அலுவலக கட்டிடத்தில் சிறுபான்மையினர் நலத்துறைக்கென்று தனியாக ஒரு ரூம் ஒதுக்கப்பட்டுள்ளது.

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. கூட்டுறவு சங்கங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. கூட்டுறவு சங்கங்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு..!

இங்கு தற்காலிக பணியாளராக ஒரு பெண் வேலை பார்த்து வருகிறார்.. அவருக்கு 30 வயதாகிறது.. இன்னும் திருமணம் ஆகவில்லை.. இவருடன் இச்சாராம் யாதவ் என்பரும் பணியாற்றி வருகிறார்.

 அதிகாரி

அதிகாரி

இவர் ஒரு உயர்மட்ட அதிகாரி.. சம்பவத்தன்று வழக்கம்போல் டியூட்டிக்கு வந்துள்ளார் அந்த பெண்.. பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதிகாரி இச்சாராம் யாதவ் அங்கு வந்து, பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் தந்துள்ளார்.... இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், அங்கிருந்து தப்ப முயன்றார்.. ஆனாலும், இச்சாராம் அலுவலகம் என்றும் பாராமல், தொடர்ந்து டார்ச்சர் தர ஆரம்பித்துள்ளார்..

வீடியோ

வீடியோ

எனவே, பாதிக்கப்பட்ட பெண், இந்த டார்ச்சரை செல்போனில் மறைமுகமாக வீடியோவும் எடுத்துவிட்டார்.. அந்த வீடியோவை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டார்.. அதில், இச்சாராம், பெண் ஊழியரிடம் ஏதேதோ பேசுகிறார்.. தொடர்ந்து அவரை சீண்டுகிறார்.. அந்த பெண்ணோ, அவரிடமிருந்து தன்னை காப்பாற்றி கொள்ள முயல்கிறார்.. கடுமையாக போராடுகிறார். பாத்ரூமுக்குள் வா, என்று அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி அழைப்பதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.

 புகார் மனு

புகார் மனு

இந்த வீடியோ வைரலானதுமே பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் தந்தார்.. சிறுபான்மையினர் நலத்துறையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக கடந்த 2013-ம் ஆண்டு முதல் இவர் பணிபுரிந்து வருகிறாராம்.. இவரது, அலுவலக பிரிவின் பொறுப்பாளர் இச்சாராம், கடந்த 2018-ல் இருந்தே இப்படித்தானாம்.. தனக்கு சாதகமாக நடந்து கொண்டால், நிறைய சலுகைகளை தருவதாக பலமுறை இச்சா ஆசை வார்த்தை கூறியதாகவும், விஷயத்தை வெளியே சொன்னால் கொலையே செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அந்த பெண் புகாரில் மேலும் தெரிவித்திருந்தார்.

குற்றச்சாட்டு

ஆனாலும், புகார் மனு தந்து ஒரு வாரம் ஆகியும், வீடியோ ஆதாரத்தை சமர்ப்பித்தும், இச்சா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கேள்வி எழுப்பிய நிலையில், இதே கேள்வியை பலரும் சோஷியல் மீடியாவில் எழுப்பினர்.. இதையடுத்து, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இச்சாராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்... இச்சாராம் ஜெயிலுக்குள் இருப்பது போன்ற ஒரு போட்டோவும் ட்விட்டரில் வெளியிடப்பட்டது. எனினும் உபி போலீசார் இந்த கைது விஷயத்தில் தாமதித்துவிட்டனர், இதற்கு என்ன காரணம்? என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

English summary
Uttar pradesh Official Arrested After Viral Videos Of Sex Assault On 30 year old Woman Employee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X