மாபெரும் பேரணி.. மோடியின் கோட்டையில் மாஸ் பிரச்சாரம்.. வாரணாசியில் கலக்கும் பிரியங்கா!
லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மிகப்பெரிய அளவில் பிரச்சார பேரணி நடத்தி இருக்கிறார்.
லக்னோ: லோக்சபா தேர்தலை முன்னிட்டு காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாரணாசியில் மிகப்பெரிய அளவில் பிரச்சார பேரணி நடத்தி இருக்கிறார்.
வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதியாகும். இங்கு காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
காங். உ.பி கிழக்கு பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தலுக்காக அவர் உத்தர பிரதேசத்தில் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

காலையில் கூட்டம்
காங்கிரஸ் சார்பாக இன்று உத்தர பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். இதற்காக பெரிய பிரச்சார மேடை அமைக்கப்பட்டு இருந்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மக்களை சந்தித்தார்
அதன்பின் வாரணாசியில் உள்ள கிராமங்களுக்கு பிரியங்கா காந்தி சென்றார். அங்கு மக்களிடையே பேசினார். முக்கியமாக உங்கள் தொகுதி எம்.பி மோடி உங்களுக்கு என்ன செய்தார் என்று பிரியங்கா வாரணாசி மக்களிடம் கேள்வி கேட்டார். வாரணாசியில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் கிடைக்காத வரவேற்பு இன்று கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும்
அதன்பின் மீண்டும் மாலையில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார். ஆனால் இந்தமுறை பிரச்சார மேடையில் பேசாமல், பிரச்சார பேரணி போல நடத்தினார். மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். தற்போதும் அந்த பிரச்சாரம் நடந்து வருகிறது.

சூப்பர்
இந்த பிரச்சார பேரணிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து இருக்கிறது. முன்னும் பின்னும் திரளாக மக்கள் சூழ்ந்து பிரியங்காவிற்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். பிரியங்கா காந்தி சமயங்களில் லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications