லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இந்தியில் மருத்துவப் படிப்பு" மத்தியப் பிரதேசத்தை பின்தொடரும் உத்தரப் பிரதேசம்.. யோகி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

லக்னோ: மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் மருத்துவப் படிப்பை இந்தியில் கற்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக இந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தி திணிப்பை கைவிடக் கோரி பல்வேறு மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டது.

ஹிந்தியில் மருத்துவ படிப்பு.. மத்திய பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா ஹிந்தியில் மருத்துவ படிப்பு.. மத்திய பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா

இந்தியில் மருத்துவப் படிப்பு

இந்தியில் மருத்துவப் படிப்பு

இதனிடையே கடந்த அக்டோபர் 16ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட மருத்துவப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு புத்தகங்களையும் அமித் ஷா வெளியிட்டார்.

 நரேஷ் புரோகித் எச்சரிக்கை

நரேஷ் புரோகித் எச்சரிக்கை

இந்தி மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படுவது குறித்து நரேஷ் புரோகித் பேசுகையில், எம்பிபிஎஸ் என்பது அடிப்படை பட்டப் படிப்பு அல்ல. உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவர்கள் அனைத்தையும் பயன்படுத்த கற்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்றவற்றின் மருத்துவ பத்திரிகைகள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகளை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும்.

ஆங்கிலம் அவசியம்

ஆங்கிலம் அவசியம்

இந்தி மருத்துவப் படிப்பு கற்பிக்கப்படுவது குறித்து நரேஷ் புரோகித் பேசுகையில், எம்பிபிஎஸ் என்பது அடிப்படை பட்டப் படிப்பு அல்ல. உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவர்கள் அனைத்தையும் பயன்படுத்த கற்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு, யுனிசெப் போன்றவற்றின் மருத்துவ பத்திரிகைகள், வழிமுறைகள், ஒழுங்குமுறைகளை மருத்துவர்கள் பின்பற்ற வேண்டும்.

மாணவர்கள் பாதிக்க வாய்ப்பு

மாணவர்கள் பாதிக்க வாய்ப்பு

அவற்றின் அனைத்து வெளியீடுகளும் ஆங்கிலத்தில் தான் உள்ளன. இந்தியில் மருத்துவம் படித்தால் அவர்கள் இந்தியாவுக்கு வெளியே போய் மேற்படிப்பு படிக்கவோ, ஆராய்ச்சியோ நடத்த முடியாது. மாணவர்கள் வெறும் எம்பிபி.எஸ் படிப்புடன் படிப்பை நிறுத்த மாட்டார்கள். அதை முடித்த பின்னர் உயர் படிப்பு படிப்பார்கள். அவர்களுக்கு முதுநிலை படிப்புகள், மாநில மொழிகளில் வர வேண்டிய தேவை ஏற்படும் என்று எச்சரித்தார். இதனால் இந்தியில் மருத்துவம் கற்பது சரியா என்ற விவாதம் எழுந்தது.

யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

இந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் மருத்துவப் படிப்பை இந்தியில் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தரப் பிரதேசத்தில் சில மருத்துவ மற்றும் பொறியியல் புத்தகங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு முதல், மாநிலத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இந்தப் பாடங்களின் படிப்புகள் இந்தியிலும் கிடைக்கும். இதற்காக அமைக்கப்பட்ட குழு மூலம் மேலும் பணிகள் நடந்து வருகின்றன என்று பதிவிட்டுள்ளார்.

English summary
Uttar Pradesh to begin teaching Medical & Engineering courses in Hindi as well tweets CM Yogi Adiyanath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X