‛செக்ஸ்’ பாலினத்தை மாற்றிய இளம்பெண்.. டிமிக்கி கொடுத்த தோழி.. காதலனுடன் எஸ்கேப்..கண்ணை மறைத்த காதல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தோழிக்காக பாலின அறுவை சிகிச்சை செய்து ஆணாக அரசு பெண் ஊழியர் மாறினார். இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் அவரது தோழி இன்னொரு நபருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் செய்து கொள்ள எஸ்கேப்பான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்தவர் சோனல். இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது வீட்டில் உள்ள மேல்தளங்களை வாடகைக்கு விட முடிவு செய்தனர்.
அதன்படி சோனல் வீட்டின் மேல்மாடி பிஜி(Paying Guest) ஆக மாற்றம் செய்யப்பட்டது. இங்கு சனா என்பவர் கடந்த 2016ல் வாடகைக்கு வந்து தங்கினார். இவர் அரசு ஊழியராக பிஜியில் தங்கி பணியாற்றி வந்தார்.

அரசு ஊழியருடன் பழக்கம்
ஒரே கட்டடத்தின் மேல்தளம், கீழ்த்தளம் என்பதால் சோனல் மற்றும் சனா ஆகியோருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அடுத்த 4 மாதங்களுக்குள் அவர்களை நெருங்கிய தோழிகளாக மாறியது. மேலும் இந்த நெருக்கம் அதீத அன்பாக மாறிப்போனது. இருவரும் ஓரினச்சேர்க்கை உறவில் இணைந்திருந்தனர். இதுபற்றி சோனலின் குடும்பத்தினர் அறிந்தனர். இதனால் கோபமடைந்த அவர்கள் சனாவை அங்கிருந்து வெளியே அனுப்பினர்.

அரசு குடியிருப்பில் சேர்ந்து..
இதற்கிடையே சனாவுக்கு அரசு சார்பில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சனா கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி அரசு குடியிருப்புக்கு சென்றார். அங்கு வசித்து கொண்டு சனா பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் சனா சென்ற அடுத்த 4 நாட்களில் சோனல் தனது வீட்டை விட்டு வெளியேறினார். சனாவுடன் தான் வாழ உள்ளதாக கூறி அவர் வெளியேறினார். இதையடுத்து சனாவின் அரசு குடியிருப்பில் சோனல் வசித்து வந்தார். இருவரும் அங்கு ஒன்றாக உறவில் இருந்தனர்.

செக்ஸ் மாற்ற சிகிச்சை
இந்நிலையில் தான் இருவரும் பிரியாமல் வாழ வேண்டும் என நினைத்தனர். மேலும் இருவரும் பெண்களாக நீண்டகாலம் உறவில் இருந்தால் அதுனை சமூகம் தவறாக பேசும் என அவர்கள் நினைத்தனர். இதனால் கணவன்-மனைவியாக வாழ வேண்டும் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பெண்ணாக இருக்கும் சனா, செக்ஸ் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தார்.

பாலின மாற்று சிகிச்சை சக்சஸ்
இதையடுத்து அவர்கள் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சனாவுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையில் அவருக்கு செக்ஸ் மாற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தகுதி இருப்பது உறுதியானது. இதையடுத்து 2020ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி சனா உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சை மூலம் தனது பாலினத்தை ஆணாக மாற்றி கொண்டார். மேலும் அவர் தனது பெயரை சோகைல் கான் என சூட்டிக்கொண்டார். இந்த பாலின மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்களில் சோனல் மனைவி என கையெழுத்து போட்டு இருந்தார். இதையடுத்து இருவரும் ஒன்றாக வசிக்க தொடங்கினர்.

மருத்துவமனையில் பணி
இதற்கிடையே தான் பாலினத்தை மாற்றி சோகைல் கானாக உள்ள சனா அரசு பணியில் இருப்பதால் சோனலும் ஏதாவது ஒரு பணியை பெற முடிவு செய்தார். இதையடுத்து 2022ல் சோனல் யதர்த் தனியார் மருத்துவமனையில் வேலை பெற்றார். இந்நிலையில் தான் சோனலில் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. சனா எனும் சோகைல் கானை கண்டுக்கொள்ளாமல் அவர் புறக்கணித்தார். இதுபற்றி கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

மருத்துவமனையில் காதல்
மேலும் சோனலுக்கும், மருத்துவமனையில் பணியாற்றி வரும் கியான் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது தெரியவந்தது. இதைக்கேட்டு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சனா அதிர்ச்சியடைந்தார். காதலை கைவிடும்படி சோனலிடம் கூறினார். ஆனால் அவர் கண்டுக்கொள்ளவில்லை.

எஸ்கேப் ஆன சோனல்
மாறாக சோனல், கியானுடன் வாழ விரும்புவதாகக் கூறியதோடு பாலின மாற்று சிகிச்சை மேற்கொண்ட சனாவை(சோகைல் கான்) விட்டுவிட்டு சொந்த வீட்டுக்கு சென்றார். மேலும் சோகைல் கான் பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது என கருதிய சோனல் அவர் மீது போலீசில் புகார் செய்தார். அதில், கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து சனா சார்பில் போலீசிடம் எடுத்து கூறப்பட்டது. இதை கேட்ட போலீசார் புகார்தாரரான சோனலுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். இருப்பினும் அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதிரடி கைது
இதனால் சனா தனக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் கூட சோனல் ஆஜராகவில்லை. இதனால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி 18ம் தேதி போலீசார் சோனலை கைது செய்தனர். விசாரணையில் அவர் கியான் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதால் சனாவை விட்டு பிரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே சனா தொடர்பான வழக்கு பிப்ரவரி 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்ததி உள்ளது.












Click it and Unblock the Notifications