உபியில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்... போட்டோகிராபர் வராததுதான் காரணமாம்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்வை படம்பிடிக்க போட்டோகிராபரை அழைக்காததால் அதிர்ச்சியடைந்த மணமகள் திருமணத்தையே நிறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மணமகன் மது அருந்திவிட்டு வந்ததாக கூறி மணமகள் திருமணத்தையே நிறுத்தியதை செய்திகளில் நாம் பார்த்திருப்போம்.

ஆனால், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் டெஹாட் மாவட்டத்தில் மணமகள் ஒருவர் வேறொரு காரணத்துக்காக திருமண நிகழ்வை நிறுத்தி இருக்கிறார்,

 திருமண மண்டபம்

திருமண மண்டபம்

கான்பூர் டெஹாட் மாவட்டம் போக்னிபூரில் உள்ள கிராமத்தில் நேற்று ஒரு தம்பதிக்கு திருமணம் நடைபெற இருந்தது. தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமணத்துக்காக மணமேடை அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஜெய்மால் என்ற சடங்கிற்காக ஒன்றாக திருமண மண்டபத்துக்கு ஊர்வலமாக வந்த மணமகனையும் மணமகளையும் இருவீட்டாரும் வரவேற்று உள்ளனர்.

ஒருவர் மட்டும் வரவில்லை

ஒருவர் மட்டும் வரவில்லை

திருமண விழாவில் மணமகன், மணமகள் வீட்டார், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் எல்லோரும் கலந்துகொண்டனர். ஆனால், ஒருவர் மட்டும் இல்லை. அவரையே மணமகள் தேடினார். அவர்தான் புகைப்பட கலைஞர். வாழ்க்கையின் முக்கிய தருணத்தை படம் பிடிக்க ஒரு புகைப்பட கலைஞரை கூட ஏற்பாடு செய்யவில்லையா என்ற கோபத்தில் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்தார் மணப்பெண்.

 இவர் எப்படி என்னை பார்த்துக்கொள்வார்?

இவர் எப்படி என்னை பார்த்துக்கொள்வார்?

அதே கோபத்தில் திருமண மண்டபத்தைவிட்டு வெளியேறிய அவர் அருகே உள்ள வீட்டிற்குள் சென்றார். மணப்பெண்ணை அழைத்து அனைவரும் சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவரோ, "மணமகனுக்கு இந்த திருமண நிகழ்வு குறித்து அக்கறை இல்லை. அவர் எப்படி எதிர்காலத்தில் என்னை சரியாக பார்த்துக்கொள்வார்.

 எல்லாம் முடிந்தது

எல்லாம் முடிந்தது

வீட்டில் இருந்த பெரியவர்கள் சமாதானம் செய்தும் அவர் கேட்காததால், இருவீட்டார் இடையே மண்டபத்திலேயே மோதல் ஏற்பட்டது. இதனால் இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றது. அங்கு இரு வீட்டாரும் முழு மனதோடு தங்களுக்கு இடையே பரிமாறிக்கொண்ட பணம், நகைகள், அன்பளிப்புகளை திரும்பி வழங்குவதாக ஒப்புக்கொண்டனர். ஒரு புகைப்படக் கலைஞருக்காக திருமணம் ரத்தானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+