லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாஜகவில் இணைந்த உறவுக்காரர்.. "அப்பாடா, ரொம்ப தேங்ஸ்.." கலாய்த்த அகிலேஷ் யாதவ்!

By
Google Oneindia Tamil News

லக்னோ: சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்திருக்கிறார் அகிலேஷ் யாதவின் உறவினர். பாஜக-வுக்கு நன்றி சொல்லி கலாய்த்திருக்கிறார் அகிலேஷ் யாதவ்.

Recommended Video

    Akhilesh Yadavs Cheeky Reply to BJP about Aparna

    பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியில் இருந்து பாஜக-வில் இணைந்திருக்கிறார் அகிலேஷ் யாதவின் உறவினர். இதற்கு பாஜக-வுக்கு நன்றி சொல்லி இருக்கிறார் அகிலேஷ் யாதவ். நீங்கள் வைத்த குற்றச்சாட்டை நீங்களே மாற்றி கொண்டிருக்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

     விஜயலட்சுமி வழக்கு.. சைதை கோர்ட்டில் ஹரி நாடார் ஆஜர்படுத்தப்படுகிறார்.. 3 நாள் காவல் கேட்க திட்டம் விஜயலட்சுமி வழக்கு.. சைதை கோர்ட்டில் ஹரி நாடார் ஆஜர்படுத்தப்படுகிறார்.. 3 நாள் காவல் கேட்க திட்டம்

    உத்தரப்பிரதேச தேர்தலை இந்தியாவே உற்றுநோக்கி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பலவழிகளில் போராடி வருகிறது. அதே நேரம், கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்த அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எப்பாடுபட்டாவது ஆட்சிக்கு வர துடித்துக் கொண்டிருக்கிறது.

    சமாஜ்வாதி கட்சி

    சமாஜ்வாதி கட்சி

    இந்நிலையில், உத்தரப்பிரதேச பாஜக-வில் இருந்து ஐந்து அமைச்சர்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். யாதவர்கள் இல்லாத ஓ.பி.சி தலைவர்களை கட்சிக்குக் கொண்டுவர அகிலேஷ் பல திட்டங்கள் தீட்டி, அதில் வெற்றி பெற்றார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா, தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காததால், பாஜகவில் இணைந்தார்.

    அபர்ணா

    அபர்ணா

    ''எங்களால் கூட டிக்கெட் கொடுக்க முடியாதவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட நீங்கள் வாய்ப்பு கொடுக்கிறீர்கள். அதற்கு தான் பாஜகவுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்'' என்று அகிலேஷ் யாதவ் கிண்டல் செய்துள்ளார். இந்நிலையில் அபர்ணா பாஜகவில் இணைந்த 24 மணி நேரத்துக்குள்,சமாஜ்வாதி கட்சியில் இருந்து அகிலேஷ் யாதவின் மற்றொரு உறுப்பினர் பாஜக-வில் இணைந்துள்ளார்.

    பிரமோத் குப்தா

    பிரமோத் குப்தா

    முலாயம் சிங் யாதவின் மருமகனும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான பிரமோத் குப்தா இன்று காலை டெல்லியில் பாஜக-வில் இணைந்துள்ளார். சமாஜ்வாதி கட்சி குண்டர்கள் கைகளில் சிக்கி இருப்பதாக, பாஜக-வில் இணைந்தபிறகு பிரமோத் குப்தா தெரிவித்திருக்கிறார். அகிலேஷ் யாதவின் குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேர் பா.ஜ.கவில் இணைந்துள்ளது பின்னடைவாக கருதப்படுகிறது.

    பாஜக-வுக்கு நன்றி

    பாஜக-வுக்கு நன்றி

    ஆனால், இதற்கும் கிண்டலாகவே பதில் சொல்லி இருக்கிறார் அகிலேஷ் யாதவ். 'எங்கள் கட்சியைக் குடும்ப கட்சி என்று பாஜக சொல்லிவந்தது. அந்த மகிழ்ச்சியை அவர்களே கெடுத்துக்கொண்டு, எங்கள் கட்சியில் இருக்கும் குடும்ப உறுப்பினர்ளை இணைத்து வருகிறார்கள். எங்கள் கட்சி குடும்ப கட்சி இல்லை என்பதை நிரூபித்ததற்கு பாஜக-வுக்கு எனது நன்றிகள்'' என்று தெரிவித்திருக்கிறார் அகிலேஷ்.

    குடும்ப கட்சி இல்லை

    குடும்ப கட்சி இல்லை

    குடும்ப கட்சி என்று சமாஜ்வாதி கட்சி முத்திரைக் குத்தப்பட்டதால் தான் தோல்வியைத் தழுவியது அக்கட்சி. 2012 முதல் 2017 வரை அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி நடத்தினார். அப்போது அவருடைய உறவினர்களான சிவபால் யாதவ் உள்ளிட்டோரால் கட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதையே பாஜக கடந்த தேர்தலில் ஆயுதமாக மாற்றி பிரசாரம் செய்து வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் அதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க அகிலேஷ் யாதவ் தொடர்ந்து முயற்சி செய்கிறார். லாயம் குடும்பத்தினர் யாரும் தேர்தல் பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவுடன் தென்படவில்லை.

    ஸ்ட்ரிக்ட் அகிலேஷ்

    ஸ்ட்ரிக்ட் அகிலேஷ்

    அகிலேஷின் மாமா பேராசிரியர் ராம் கோபால் யாதவ், ஷிவ்பால் யாதவ் மற்றும் பாய் தர்மேந்திர யாதவ் ஆகியோர் அனைத்து கட்சி மேடைகளில் இடம்பெறுவார்கள். இந்தமுறை இவர்கள் யாரும் எந்த இடத்திலும் தென்படவில்லை. மேலும், இம்முறை குடும்ப உறுப்பினர் யாருக்கும் தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை என்பதை அகிலேஷ் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது அகிலேஷ் குடும்பத்தில் இருந்து இருவர் பாஜக-வில் இணைந்திருக்கிறார்கள். இதனால் சமாஜ்வாதி கட்சி குடும்பக் கட்சி என்ற பெயரில் இருந்து விடுபடும் என்று அகிலேஷ் யாதவ் நினைக்கிறார்.

    English summary
    Uttarpradesh assembly Election: Akhilesh Yadav's cousin joined in Bjp from the Samajwadi Party. So Akhilesh Yadav has thanked the BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X