Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாய் குரைத்ததால் நின்றுப்போன காதல் திருமணம்.. உனக்கு என்னடா துரோகம் பண்ணுனேன்.. புலம்பும் மணமகன்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் காதலித்து கரம்பிடிக்க மணமேடை வரை சென்ற காதல் ஜோடிக்கு கடைசி நேரத்தில் திருமணம் நடக்கவில்லை. இதற்கு மணப்பெண் ஆசை ஆசையாக வளர்ந்த செல்ல நாய் தான் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம்.. நம்புங்கள் அதுதான் உண்மை.. உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு:

அனைத்து காதல்களும் திருமணத்தில் இணைவது இல்லை. சில காதல்கள் பாதியிலேயே முறிந்து போகலாம். இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். இருப்பினும் விரும்பிய காதலன், விரும்பிய காதலியை பலரும் இப்போது கரம்பிடித்து வருகின்றனர்.

wedding-called-off-due-to-brides-pet-dog-in-uttar-pradesh
Photo Credit:

ஆனால் உத்தர பிரதேசத்தில் ஒரு விநோத சம்பவம் நடந்துள்ளது இன்னும் கொஞ்சம் நேரம் தான்.. காதலர்களாக இருக்கும் நாம் கணவன் - மனைவியாக மாறப்போகிறோம். வீட்டுக்கு தெரியாமல் சந்தித்த நாம் இனி ஒரே வீட்டில் வாழப்போகிறோம். அப்பா- அம்மா உள்பட உறவினர்களுக்கு தெரியாமல் பேசிய நாம் பக்கத்தில் இருந்து மணிக்கணக்கில் பேசலாம் என்ற பெரும் கனவில் காதலனும், காதலியும் திருமண மேடை ஏறினர்.

நகைக்கடை உரிமையாளர்

அந்த காதலனின் பெயர் சுமித் கேசர்வாணி. வயது 25. அந்த காதலியின் பெயர் தனு கேர்வாணி. வயது 19. இவர்கள் இருவரும் உத்தர பிரதேச மாநிலம்பதேபூர் மாவட்டம் காகா தாலுகாவை சேர்ந்தவர்கள். சுமித் நகைக்கடை நடத்தி வருகிறார். இருவரும் தங்களின் காதலை குடும்பத்தினரிடம் கூறினர். முதலில்எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அதன்பிறகு ஓகே கூறினர்.

திருமண சடங்கு

இதையடுத்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. கடந்த 19ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. மண்டபத்தில் சுமித் மற்றும் தனு முகத்தில் புன்னகை தழும்ப அமர்ந்து இருந்தனர். அவர்களை சுற்றி இருவரின் உறவினர்கள் கூடியிருந்தனர். திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்து வந்தது.

நாய் குரைத்தததால்...

அப்போது எமனாக வந்தது அந்த செல்ல நாய். மணமகள் தனு வீட்டில் ஆசையாக வளர்த்த செல்ல நாய் மண்டபத்தின் ஓரத்தில் கட்டப்பட்டு இருந்தது. அந்த நாய் திடீரென்று சத்தமாக குரைக்க தொடங்கியது. இது அங்கிருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. இதனால் மணமகன் சுமித் தரப்பு உறவினர்கள் அந்த நாயை அமைதிப்படுத்த முயன்றனர். அப்போது ஒருவரை நாய் கடித்தது.

கைக்கலப்பு

இதனால் அந்த நாயை மற்றவர்கள் தாக்கினர். இதுதான் திருமண விழாவில் பிரளயத்தை ஏற்படுத்தியது. எப்படி நாயை தாக்கலாம் என்று மணமகள் குடும்பத்தினர் கேட்க வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே சண்டை வெடித்தது. இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இருக்கைகளை தூக்கி தாக்கி கொண்டனர்.

நின்ற திருமணம்

இதனால் கல்யாண மண்டபம் போர்க்களமாக மாறியது. இந்த சண்டையில் மணமகள் வீட்டை சேர்ந்த ரிஷப் கேசர்வாணி, சுபம் குப்தா, சங்கீதா தேவி ஆகிய மூவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும், ஒருவருக்குக் கையில் எலும்பு முறிவும் உண்டானது. மணமகன் தரப்பிலும் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. காதலனும் மணமகனுமான சுமித் ‛உனக்கு என்னடா துரோகம் பண்ணினேன்.. இப்படி என் திருமணத்தை நிறுத்தி விட்டியே' என நாயிடம் சொல்லாத குறையாக புலம்பி வருகிறார். மேலும் மணமகள் ஆசை ஆசையாக வளர்த்த நாயே அவரது திருமணம் நிற்க காரணமானது பேசும் பொருளாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+