Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மைசூரில் படித்தபோது.. ரஜினிகாந்த் சந்திப்பால் பூரித்துபோன அகிலேஷ் யாதவ்! என்ன சொன்னார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நடிகர் ரஜினிகாந்த் நேற்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்நிலையில் தான் இன்று நடிகர் ரஜினிகாந்த் அகிலேஷ் யாதவை திடீரென்று சந்தித்து பேசினார். இந்நிலையில் தான் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு பற்றியும், மைசூரில் அவர் என்ஜினீயரிங் படித்தபோது நடந்த சம்பவம் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து பூரித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். இது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இதற்கிடையே தான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார்.

What did Akhilesh Yadav says about meeting with actor Rajinikanth?

அந்த பயணத்தை முடித்த நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தலைவர்களையும், ஆளுநர்களையும் சந்தித்து வருகின்றனர். அதன்படி சமீபத்தில் ஜார்கண்ட் ஆளுநரான தமிழகத்தில் சிபி ராதாகிருஷ்ணனை அவர் சந்தித்து பேசினார்.

அதன்பிறகு நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேசம் சென்றார். நேற்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். முன்னதாக யோகி ஆதித்யநாத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார். இதுதொடர்பாக போட்டோ, வீடியோ இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது.

முன்னதாக அவர் உத்தர பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத்துடன் சேர்ந்து ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தார். மேலும் உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேலை, ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று நடிகர் ரஜினிகாந்த் லக்னோவில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.

இந்த வேளையில் ரஜினிகாந்த் அகிலேஷ் யாதவின் தந்தையான மறைந்த உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங்கின் போட்டோவுக்கு மரியாதை செய்தார். இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு குறித்து அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பூரித்துப்போய் சில தகவல்களை குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தும், அவரும் ஆரத்தழுவி இருக்கும் போட்டோ மற்றும் இருவரும் இருக்கையில் அமர்ந்து பேசிய போட்டோக்களை அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ‛‛இதயங்கள் சந்திக்கும் போது ஆரத்தழுவுகின்றன. மைசூரில் என்ஜினீயரிங் படித்தபோது நடிகர் ரஜினிகாந்தை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம். அன்று முதல் நண்பர்களாக இருக்கிறோம்'' என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+