Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எங்களை.. எங்களை.." உபி போலீஸ் கண் முன் சுடப்பட்ட அடிக் அகமது.. சொன்ன கடைசி வார்த்தை என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது சுட்டுக்கொலை செய்யப்படும் முன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

What were the last words of Uttar Pradesh MP Atiq Ahmed and his brother killed in front of police?

இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது மீது 100க்கும் மேற்பட்ட கிரிமினல் கேஸ்கள் உள்ளன. அவர் எம்பியாக இருந்தவர் என்றாலும் அரசியல் தாதா என்பது குறிப்பிடத்தக்கது.

அடிக் அகமது ஏற்கனவே கடத்தல் கேஸ், பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கு, உமேஷ் பால் கொலை வழக்கு என பல வழக்குகளில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஆவார். இவர் பெரிய குற்றவாளி என்றாலும்.. சட்ட ரீதியாக அவருக்கு தண்டனை கொடுப்பதே சரியானது.

உமேஷ் பால் கொலை வழக்கு காரணமாக சிறையில் இருந்த அவரை மருத்துவ பரிசோதனை என்று கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அங்கே செய்தியாளர்கள் போல கெட்டப் போட்டு வந்தவர்கள் போலீசாருக்கு முன்னிலையில், கேமராவிற்கு முன்னே இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தி உள்ளனர். முதலில் அடிக் அகமதுவை சுட்டுவிட்டு அதன்பின் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இந்த கொலைக்கு முன் அடிக் கொடுத்த பேட்டியும் அவரின் கடைசி வார்த்தைகளும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியே வந்து கொண்டு இருந்த , செய்தியாளர் ஒருவர்.. நீங்கள் உங்கள் மகனின் இறுதிச்சடங்கிற்கு செல்லவில்லையா என்று கேட்டுள்ளார்.

எங்களை அனுமதிக்கவில்லை. எங்களை அவர்கள் கூட்டி செல்லவில்லை. அதனால் நாங்களும் செல்லவில்லை என்று, குறிப்பிட்டு இருக்கிறார். அதுதான் அவர் சொன்ன கடைசி வார்த்தை.

அவருடைய சகோதரர் அஷ்ரஃப்.. நாங்கள் நல்ல இஸ்லாமியர்கள் என்று சொன்னதுதான் அவர் சொன்ன கடைசி வார்த்தை ஆகும்.

செய்தியாளர் சந்திப்பில் கேமராக்களுக்கு முன்னிலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதை பற்றி விசாரிக்க நீதி விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் இருவரின் கைகளும் விலங்கு மாட்டப்பட்டு இருந்த நிலையில் அடுத்தடுத்து இரண்டு பேருமே படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். தலைக்கு அருகே துப்பாக்கியை வைத்து இந்த கொலையை செய்துள்ளனர்.

பிரயாகராஜில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே என்கவுண்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2 வருடமாக அங்கே 13 நாட்களுக்கு 1 என்ற விகிதத்தில் என்கவுண்டர் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில்தான் சமீபத்தில் ஆடிக் அகமது மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

இந்த என்கவுண்டர் போலீஸ் என்கவுண்டர் என்று கூறப்பட்டு வரும் நிலையில்தான் உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமது கொலை செய்யப்பட்டு உள்ளார். மகனின் உடல் புதைக்கப்பட்டு இருக்கும் இடத்தில இருந்து 3 கிமீ தூரத்தில்தான் அப்பா சுட்டுக்கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+