ஒரே ஒரு பட்டனால் சரிந்த நொய்டா இரட்டை கட்டடங்கள்.. 80,000 டன் இடிபாடுகளை அப்புறப்படுத்துவது எப்படி?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இரட்டை கட்டடங்களை 9 நொடியில் தகர்த்தெறிந்த நிலையில் அவற்றால் ஏற்பட்ட இடிபாடுகள் மட்டும் 80 ஆயிரம் டன் ஆகும் என கூறப்பட்டுள்ளது. இந்த இடிபாடுகள் என்ன செய்யப்படுகின்றன?
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட இரட்டைக் கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் அபெக்ஸ் என்ற கோபுரம் 32 மாடிகளை கொண்டதாகும். இதன் உயரம் 328 அடியாகும். இதன் மற்றொரு கோபுரமான சியான் 31 என்பது 31 மாடிகளை உடையது. இதன் உயரம் 318 அடி.
இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து அந்த இரு கட்டடங்களையும் இடித்து தள்ள உச்சநீதிமன்ம் உத்தரவிட்டது. இடிப்புக்கு விதிக்கப்பட்ட கெடு பல காரணங்களால் நீட்டிக்கப்பட்டது.

உதச்
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி இந்த இரட்டை கோபுரங்கள் தற்போது தகர்த்தெறியப்பட்டது. இதற்காக 3700 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று காலை முதலே அந்த கட்டடங்களை சுற்றியிருந்த வீடுகளை சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தனர்.

இரட்டை கட்டடம்
காலை முதலே இரட்டை கட்டடம் இருக்கும் இடத்திற்கு பொதுமக்கள் குவிய தொடங்கினார். அந்த கட்டடத்தின் முன்பு ஏராளமாோர் கூடி செல்பி எடுத்துக் கொண்டனர். தன்னார்வலர்கள் நிறைய பேர் அந்த கட்டடங்களை சுற்றி இருந்த வீடுகளில் கைவிடப்பட்ட35 நாய்களை மீட்டனர். வாட்டர் பால் இம்லோஷன் எனும் தொழில்நுட்பம மூலம் தகர்த்தப்பட்டது.

ரூ 30 கோடி செலவு
இந்த கட்டடங்கள் வெடிக்கப்பட்ட போது சுற்றியுள்ள வீடுகளில் கரும்புகை வீசியது. இந்த கட்டடங்களை இடிப்பதற்கு ரூ 30 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த கட்டடம் இடிக்கப்பட்ட நிலையில் 5 மணி நேரம் கழித்துதான் அதன் அருகே உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிப்பர். இந்த கட்டடங்களை வெடிக்க வைத்ததன் மூலம் 80 ஆயிரம் டன் இடிபாடுகள் அதாவது குப்பைகள் இருக்கும். இந்த குப்பைகளை அகற்ற 3 ஆயிரம் லாரிகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அது போல் மாசுகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

80 ஆயிரம் டன் இடிபாடுகள்
இதுகுறித்து நொய்டா மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறுகையில் 80 ஆயிரம் டன் இடிபாடுகளும் வீணாகாது. அதன் மூலம் 4 ஆயிரம் டன் இரும்புகள் மற்றும் எஃகு கிடைக்கும். இதை இடிப்பு செலவில் ஒரு பகுதியை மீட்க எடிஃபைஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது (கட்டடத்தை தகர்த்த நிறுவனம்). ஒரு நாளைக்கு 300 டன் குப்பைகள் வீதம் மீட்க முடிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.
-
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications