அன்று மைக் பிடித்த இளைஞருக்கு.. இன்று உச்சபட்ச மரியாதை.. ஆனால் ரத யாத்திரையை நடத்திய அத்வானி எங்கே?
லக்னோ: அயோத்தியில் இன்று திறக்கப்படும் ராமர் கோவிலுக்கு மூளையாக, முதல் காரணகர்த்தாவாக செயல்பட்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அயோத்தி தீர்ப்பு: 2019 நவம்பர் 9, இந்தியாவே அந்த தீர்ப்பிற்காக காத்து இருந்தது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கினர்.

அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சரியாக 30 வருடம் முன் 1989ல் தொடங்கிய பிரச்சனை ஒன்றுக்கான முற்றுப்புள்ளி அந்த நாளில் வைக்கப்பட்டது.
செங்கல் நடப்பட்டது: இந்த அயோத்தி வழக்கில் நவம்பர் 9ம் தேதிதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் இருந்து சரியாக 30 வருடம் முன் 1989 நவம்பர் 9ம் தேதிதான் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவிலை கட்டபோகிறோம். எல்லோரும் செங்கல் கொடுங்கள் என்று விஸ்வ இந்து பரிஷத் அதே நாளில்தான் குரல் எழுப்பியது. அப்போதுதான் அயோத்தி பிரச்சனைக்கான முதல் செங்கல் நடப்பட்டது.
இந்த அயோத்தி விவகாரத்தை தொடங்கி வைத்தது மோடியோ, வாஜ்பாயோ, அத்வானியோ அல்லது முரளி மனோகர் ஜோஷியோ அல்ல. விஸ்வ இந்து பரிஷத் அமைப்புதான். சரியாக சொல்ல வேண்டும் என்றால், அப்போது பாஜகவின் கை பெரிய அளவில் ஓங்கவில்லை. 1984 நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களை வென்று, திக்கு தெரியாமல் பாஜக நின்றது. அப்போதுதான் சரியாக அயோத்தி பிரச்சனையை விஸ்வ இந்து பரிஷத் கையில் எடுத்தது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்திய இந்த அயோத்தி பிரச்சாரம் நேரடியாக பாஜகவிற்கு பலவகைகளில் பலன் அளித்தது.
அத்வானி மூளை: எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் சுற்றிக்கொண்டு இருந்த அத்வானி -வாஜ்பாய் இருவருக்கும்.. இதுதான் உங்கள் அரசியலுக்கான கொள்கை, அரசியலுக்கான பாதை என்பதை அயோத்தி காட்டியது. அயோத்தி பிரச்சனை பாஜகவிக்கு தூரத்து வெளிச்சமாக இருந்தது. அயோத்தி பிரச்சனையின் எழுச்சி காரணமாக, தீவிர இந்துக்களின் வாக்குகள் பாஜக பக்கம் திரும்ப தொடங்கியது. ஐந்தே வருடத்தில் 1989 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 89 இடங்களை வென்றது .
யாத்திரை: வெறும் ஐந்து வருடத்தில் காங்கிரஸ் என்ற இமாலய கட்சிக்கு எதிராக இப்படி வளர முடிந்தது பாஜகவிற்கு நம்பிக்கை அளித்தது. இனி இதுதான் அரசியல் பாதை என்று பாஜக அப்போது முடிவு செய்தது. இதற்கான பிள்ளையார் சுழியை போட்டவர்கள் அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவர். இவர்கள் மூவரும் பாஜகவின் திட்டங்களை செதுக்கிக் கொண்டு இருந்த போது, அப்போது யாருக்கும், தெரியாமல் குஜராத்தில் ஒரு இளைஞர் தனக்கான அரசியல் திட்டங்களை வகுத்துக் கொண்டு இருந்தார்.
1989 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நம்பிக்கை அளித்தவுடன் பாஜக முழுக்க முழுக்க அயோத்தி பிரச்சனையில் களமிறங்கியது. 1990ல் அத்வானி தன்னுடைய ராம் ரத யாத்திரையை அறிவித்தார். 1990 செப்டம்பர் மாதம் அத்வானியின் ராம் ரத யாத்திரை தொடங்கியது. இதன்நோக்கம் ஒன்றுதான்.. அயோத்தியில் அந்த குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவது. இதற்காக மக்களை ஒன்றிணைப்பது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கொள்கையை சுவீகரித்துக் கொண்ட அத்வானி ராம் ரத யாத்திரையில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.
மோடி மைக்: குஜராத்தில் இருக்கும் சோம்நாத் பகுதியில் அத்வானி தனது ராம் ரத யாத்திரையை தொடங்கினார் . அங்கிருந்து மத்திய இந்தியா வழியாக உத்தர பிரதேசம் சென்று பின் அயோத்திக்கு செல்வதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். அயோத்தி பிரச்சனையை மையமாக வைத்து வடஇந்திய அரசியலை மாற்றியது இந்த ராம் ரத யாத்திரைதான். இந்த ரத யாத்திரை மூலம் அத்வானி ஒரு புனிதர், இந்துக்களை மீட்க வந்தவர், பாதுகாவலர் என்ற பெரிய பிம்பத்தை அடைந்தார்.
அத்வானியின் பிம்பம் மக்கள் மத்தியில் உயர்ந்த அதே நேரத்தில், யாருக்கும் தெரியாமல், அத்வானிக்கு மைக் பிடித்தபடி குஜராத் ராம் ரத யாத்திரையில் மெல்லிய தாடி வைத்த இளைஞர் ஒருவர் கலந்து கொண்டார். அவர்தான்.. நரேந்திர தாமோதர்தாஸ் மோடி.. அத்வானியின் ராம் ரத யாத்திரையை சோம்நாத்தில் இருந்து மும்பை வரை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அத்வானி மோடிக்கு வழங்கி இருந்தார். சரியாக சொல்லவேண்டும் என்றால் அன்று மோடியை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அரசியலில் வளர துடிக்கும் ஒரு இளைஞர் என்றுதான் அவரை எல்லோரும் பார்த்தனர்.
மோடி - அத்வானி: அதிலும் அத்வானிக்கு கூட மோடி மீது பெரிய விருப்பம் இல்லை. மோடியை விட அத்வானி கேசுபாய் பட்டேல், ஷங்கர்சின் வாஹ்லா , காசிராம் ராணா போன்ற மக்கள் ஆதரவு பெற்ற இளைஞர்களையே ஆதரித்தார். அப்போதே மோடிக்கும் அத்வானி மீது பெரிய பிடித்தம் இல்லை. மோடிக்கு அத்வானியை விட முரளி மனோகர் ஜோஷி மீதுதான் அதிக மதிப்பும், மரியாதையும் இருந்தது. ரத யாத்திரை நடத்த சமயத்தில் பாஜகவை தாண்டி, மோடியை அப்போது பெரிதாக யாருக்குமே தெரியாது என்றுதான் கூற வேண்டும்.
இப்போது பாஸ்ட் பார்வேட் செய்தால்.. அன்று மைக் பிடித்த அதே மோடியின் முன்னிலையில்தான் இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
திறப்பு விழா: அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.
இன்று திறக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி இன்று ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார். இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
அத்வானி வரவில்லை: அன்று மைக் பிடித்த அதே இளைஞர்.. அதாவது மோடிதான் இன்று ராமர் கோவிலின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கிறார். முன்னிலை வகிக்கிறார். அதே ரத யாத்திரையை முன்னின்று நடத்திய அத்வானி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை .
தற்போது 96 வயதாகும் அத்வானி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் பொது இடங்களுக்கு செல்ல முடியவில்லை. அதேபோல் வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் அத்வானி வெளியே செல்வது அவ்வளவு சரியான முடிவாக இருக்காது.
இதனால் அத்வானி இன்று நடக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications