காதலனை கரம் பிடிக்க மாஸ்டர்பிளான்.. கணவனை கொன்று புதைத்து.. மேலே செப்டிக் டேங்க் கட்டிய மனைவி! பகீர்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது காதலனை கரம்பிடிக்க தனது கணவரை கொலை செய்து அவரது உடலை புதைத்து அதன் மேல் செப்டிக் டேங்க் கட்டிய இளம்பெண் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கும் நீது எனும் பெண்ணுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றிருக்கிறது. ஆனால் நீது குடும்ப வாழ்க்கையில் உற்சாகமாக இல்லையென்று சொல்லப்படுகிறது. சதீஷ்க்கும் நீதுவுக்கும் இடையில் அடிக்கடி சண்டடை சர்ச்சரவுக்கள் எழுந்திருக்கின்றன. இதனால் நீது அடிக்கடி அவரது அம்மா வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார்.
இந்நிலையில்தான் சதீஷின் நண்பர் ஹர்பால் நீதுவுக்கு அறிமுகமாகியுள்ளார். நீதுவை பார்ப்பதற்காக அடிக்கடி சதீஷின் வீட்டு இவர் வந்து சென்றிருக்கிறார். இவர்கள் அடிக்கடி போனில் பேசிக்கொண்டிருந்த நிலையில் நட்பு காதலாக மாறியுள்ளது. ஆனால் இது சதீஷிக்கு தெரியவில்லை. சதீஷ் இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் அடிக்கடி ஒருவரையொருவர் தனிமையில் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

புகார்
இதனையடுத்து இவர்களது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்ட செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் இடையில் குறுக்கே சதீஷ் இருந்திருக்கிறார். எனவே என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருக்கையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சதீஷ் காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரது மனைவி நீது எந்த புகாரும் கொடுக்கவில்லை. ஆனால் சதீஷின் சகோதரர் சோட்டாலால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். புகாரையடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் நீதுவிடமிருந்து எந்த உருப்படியான தகவலையும் காவல்துறையினரால் பெற முடியவில்லை.

விசாரணை
இதனையடுத்து ஹர்பாலை பிடித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் முதலில் எந்த பிடியும் கிடைக்கவில்லை. ஆனால் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மை வெளிவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஹர்பால் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கும் இவருடன் பணி புரிந்த வந்த சதீஷ் என்பவரின் மனைவி நீதுவுக்கும் இடையே தொடர்பு இருந்திருக்கிறது. இவர்கள் அடிக்கடி வெளியில் தனிமையில் சந்தித்திருக்கின்றனர். அப்போது இருவரும் திருமணம் செய்துகொள்வது குறித்து பேசியிருக்கிறார்.

திருமணம்
இது குறித்து திட்டமிட்ட அவர்கள் முதலில் ஊரை விட்டு எங்காவது ஓடிவிடுவோம் என்று யோசித்திருக்கின்றனர். ஆனால் அப்படி செய்தால் நம்முடைய பெயர் கெட்டுவிடும் என்று நினைத்து மாற்று வழியை யோசித்திருக்கிறார்கள். அப்போதுதான் சதீஷை கொல்வது என்று முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து திட்டமிட்டபடி ஜனவரி 10ம் தேதியன்று இரவு சதீஷ் உறங்கிக்கொண்டிருக்கையில், அவரதுமனைவியும் அவரது வீட்டில் மறைந்திருந்த ஹர்பாலும் சேர்ந்து சதீஷின் முகத்தில் தலையணை வைத்து கொலை செய்திருக்கின்றனர். அதே நேரம், சதீஷ் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்ய கயிறு கொண்டு கழுத்தை நெறித்து பார்த்திருக்கிறார்கள்.

செப்டிக் டேங்க்
பின்னர் சதீஷின் உடலை இழுத்துக்கொண்டுவந்து ஹர்பால் வேலை செய்துக்கொண்டிருந்த ஒரு வீட்டில் போட்டு புதைத்துள்ளனர். அடுத்த நாள் பணிக்கு சென்ற ஹர்பால் புதைத்த இடத்தில் புது வீட்டின் செப்டிக் டேங்க் கட்ட தொடங்கியுள்ளார். இந்த விஷயம் எதுவும் வீட்டின் உரிமையாளருக்கு தெரியவில்லை. எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்த பின்னர் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று செப்டிக் டேங்க் கட்டிய இடத்தை தோண்டினோம். அங்கு ஒரு சடலம் கிடைத்தது. சடலத்தை பரிசோதனை செய்து பார்க்கையில் அது சதீஷினுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.

கொலை
எனவே இந்திய தண்டனை சட்டத்தின் 302, 201, 34, 120B ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹர்பாலையும், நீதுவையும் கைது செய்துள்ளோம். ஆனால் இவர்களுக்கு மூன்றாவது நபர் ஒருவர் உதவி செய்திருக்கிறார். அவரை தேடி வருகிறோம் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார்" என்று கூறியுள்ளனர். தன்னுடைய காதலுக்காக கணவனை காதலுடன் சேர்ந்து பெண் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் காசியாபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications