சவுதியில் கணவர்.. இந்தியாவில் கர்ப்பமான மனைவி! விசாரணையில் வெளியான ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவரின் நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் கணவரின் சம்மதத்துடன் நடத்திருக்கிறது என்பதால் அப்பெண் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணையின் அடிப்படையில் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞரை திருமணம் செய்திருந்தார். இளைஞர் வேலை வாய்ப்புக்காக சவுதி அரேபியா சென்றுவிட்டார். வருஷத்திற்கு ஒருமுறையோ, இரண்டு முறையோதான் வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். இப்படி ஒருமுறை வரும்போது தனது நண்பர்களுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்பது மனைவிக்கு புரியவில்லை. அன்று இரவுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.
அதாவது அன்று இரவு தனது நண்பர்களை வைத்து மனைவியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் கணவர். இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என்றும், அப்படி நடந்தால் நீயும் உன் பிள்ளைகளும் தெருவில்தான் நிற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் விஷயத்தை வெளியில் சொல்லவில்லை.
அத்துடன் இந்த விஷயம் முடிவுக்கு வந்துவிடும் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்தார். ஆனால் விஷயம் அப்போதுதான் தொடங்கியிருக்கிறது. அதாவது, கணவன் வெளிநாடு சென்றவுடன் அவரது நண்பர்கள் மீண்டும் பெண்ணை தொந்தரவு செய்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தொந்தரவு உச்சத்தை எட்டியபோது, கணவரிடம் சொல்லிவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். ஆனால் இப்படி செய்ய சொன்னதே உன் கணவர்தான் என்று கூறி, கணவரின் நண்பர்கள் பெண்ணை வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக இதுபோன்ற வன்கொடுமை நடந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சவுதி அரேபியாவில் உள்ள அவர் கணவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவருக்கு பணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போது இளம்பெண் 1 மாதம் கர்ப்பமாகியுள்ளார். கணவரும், குடும்பமும் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்திருக்கிறது.
புகார் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள காவல்துறை அதிகாரி, "இந்த சம்பவம் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். எனவே இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். பின்னர் அதன் அடிப்படையில் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்.
இத்தனை ஆண்டுகளாக அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை துயரத்துடன் தாங்கி வந்திருக்கிறார். அவரது குழந்தைகளுக்காக கொடுமைகளை தாங்கிக்கொண்டாாக கூறியுள்ளார். நிச்சயம் அவருக்கு நாங்கள் நீதியை பெற்று தருவோம். குற்றவாளிகள் வெளிநாட்டிற்கு தப்பிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே, அதனை தடுக்கவும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
சொந்த கணவர் மற்றும் அவர் நண்பர்களால் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications