காதலி மட்டுமில்லை.. அவர் மகளும் வேணுமாம்.. சபல ஆசாமிக்கு கிடைத்த குலைநடுங்க வைக்கும் "தண்டனை"
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற லிவ் இன் ரிலேஷன்ஷிப் காதலனின் மர்ம உறுப்பை பெண் ஒருவர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video
உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூர்கேரியில் உள்ள மாகிவாகாஞ்ச் பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளைஞர். இவருக்கும் 36 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அதாவது 36 வயது நிரம்பிய பெண் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 14 வயது மகளுடன் வசித்து வரும் நிலையில் இளைஞர் அவருடன் பழகினார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் நெருக்கமான உறவாக மாறியது.

திருமணம் செய்யாமல் வாழ்க்கை
அதாவது இளைஞரும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் ‛லிவ் இன் ரிலேஷன்ஷிப்' முறையில் வாழ துவங்கினர். இருப்பினும் மகள் இருப்பதால் இருவரும் ஒரே வீட்டில் வசிக்காமல் தனித்தனியே வசித்து வந்தனர். ஆனாலும் தினசரியாக அந்த இளைஞர், பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 17 ம் தேதி அந்த பெண் அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றார்.

பலாத்கார முயற்சி
இந்த வேளையில் வீட்டுக்கு இளைஞர் வந்துள்ளார். வீட்டில் லிவ் இன் ரிலேஷன் பார்ட்னரின் 14 வயது மகள் மட்டுமே இருந்தார். இந்த வேளையில் இளைஞர் அந்த சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார். மேலும் அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி அங்கிருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவர் சிறுமியை விடாமல் தடுத்துள்ளார்.

மர்மஉறுப்பை வெட்டிய காதலி
இந்த வேளையில் தான் தோட்டத்துக்கு சென்ற சிறுமியின் தாயும், இளைஞரின் ‛லிவ்இன் ரிலேஷன்ஷிப்' காதலியுமான அந்த பெண் வந்தார். தனது மகளிடம் தவறாக நடக்க முயற்சிப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது மகளை காப்பாற்ற முயன்றார். அவரால் முடியாத நிலையில் கோபமடைந்த அந்த பெண் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து ‛லிவ்இன் ரிலேஷன்ஷிப்' காதலனின் மர்மஉறுப்பை வெட்டி மகளை காப்பாற்றினார்.

மருத்துவமனையில் சிகிச்சை
இதற்கிடையே தான் ‛லிவ்இன் ரிலேஷன்ஷிப்' காதலன் வலியில் துடிதுடித்தார். இதையடுத்து அவர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவம் தொடர்பாக அந்த பெண் சார்பில் அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இருப்பினும் தற்போது அவருக்கு சிகிச்சை அவசியம் என்பதால் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வருத்தம் இல்லை என பேட்டி
இதற்கிடையே சம்பவம் குறித்து அந்த பெண் கூறுகையில், ‛‛அதிர்ஷ்டவசமாக, நான் சரியான நேரத்தில் வீடு திரும்பி அவரை கையும் களவுமாகப் பிடித்தேன். என் மகள் விஷயத்தில் அவருக்கு பாடம் கற்பிக்க விரும்பினேன். இதனால் சமையலறையிலிருந்து கத்தியை கொண்டு வந்து அவரது அந்தரங்கை உறுப்பை வெட்டினேன். இதை செய்ததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications