கொழுந்தனாரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய அண்ணி.. தங்கையை காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரம்
லக்னோ: தங்கையை காதலித்து ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த பெண் தனது கொழுந்தனாரின் அந்தரங்க உறுப்பில் கத்தியால் குத்தி, வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் உள்ள மவுய்மாவில் மல்கான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அசாரே. இவரது மகன் உமேஷ் (வயது 20). இவரது அண்ணன் பெயர் உதய். இவரது மனைவி மஞ்சு. மஞ்சுவிற்கு தங்கை இருக்கிறார். இவர் அடிக்கடி தனது அக்காள் வீட்டுக்கு வந்து செல்வார்.

அப்போது வீட்டில் இருக்கும் உமேஷ் உடன் மஞ்சுவின் தங்கைக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே நட்பாக மாறியது. அதன்பிறகு இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து பேச தொடங்கினர்.
அப்போது இருவருக்கும் இடையேயான உறவு நெருக்கமானது. நட்பு இருவருக்கும் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் அடிக்கடி வெளியே ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். அதோடு உல்லாசம் அனுபவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் உமேஷ் மற்றும் மஞ்சுவின் தங்கை இடையேயான காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்தது.
உமேஷின் குடும்பத்தினர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக தந்தை ராம் அசாரே திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். இதனால் உமேஷ் தனது காதலில் இருந்து பின்வாங்கினார். அவர் தனது அண்ணியின் தங்கையுடன் பேசுவதை தவிர்த்தார். அது மட்டுமின்றி இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக பழக தொடங்கினார்.
இதனால் உமேஷின் காதலி மனவருத்தம் அடைந்தார். தன்னை உமேஷ் ஏமாற்றியதாக நினைத்து அழுதார். மனஅழுத்தத்துக்கு உள்ளானர். அதோடு தனிமையில் வசிக்க தொடங்கினார். குடும்பத்தினருடன் பேசுவதை தவிர்த்தார். இதனால் மஞ்சுவும் விரக்தியடைந்தார். தனது தங்கையை காதலித்து ஏமாற்றிய கொழுந்தனாரான உமேசை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தார். இதற்கான சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.
கடந்த 16ம் தேதி மஞ்சு தனது கொழுந்தனாரை பழிவாங்க முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கினர். உமேஷ் தனது அறையில் தூங்கினார். அப்போது நள்ளிரவில் உமேஷின் அறைக்கு மஞ்சு நுழைந்தார். அவரது அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்தியதோடு, வெட்டிவிட்டு ஓடினார். உமேஷ் வழிதாங்க முடியாமல் அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு குடும்பத்தினர் அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.
குடும்பத்தினர் உமேசை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது, அவர் உடல்நலம் தேறி வருகிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து போலீசார் குடும்பத்தினரை பிடித்து விசாரித்தனர். அப்போது சம்பவம் நடந்ததில் இருந்து மஞ்சு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது உமேஷ் தனது அண்ணி மஞ்சுவின் தங்கையை காதலித்ததும், அதன்பிறகு குடும்பத்தினர் எதிர்த்தால் அதனை கைவிட்டதும் தெரியவந்தது. இதனால் கோபமான மஞ்சு, கொழுந்தனார் உமேஷின் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்தியும்,வெட்டியும் சிதைத்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுவை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications