அட கொடுமையே.. முத்தலாக் சொல்லியதால் அதிர்ச்சி... புகார் கொடுத்த மனைவி.. "நோஸ் கட்" செய்த கணவர்!
முத்தலாக் செய்த மனைவியின் மூக்கை கணவன் அறுத்துள்ளார்
Recommended Video
லக்னோ: "நோஸ்கட்" பண்ணிட்டாருன்னு சும்மா பேச்சுக்கு சொல்லுவோம்.. ஆனா நிஜமாகவே நோஸ்கட் ஒன்று உபியில் நடந்துள்ளது. முத்தலாக் செய்த கணவன் குறித்து புகார் அளித்ததால், மனைவியின் மூக்கை நிஜமாகவே அறுத்துவிட்டார்.
எத்தனையோ சர்ச்சைகள், கருத்துகள், விமர்சனங்களுக்கு அப்பால், முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி.. முத்தலாக் தடை சட்டத்துக்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இப்படி எல்லா வகையிலும் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த விஷயத்தில் முதன்முதலாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. முதல் சம்பவமே வெட்டுகுத்து, ரத்தம், போலீஸ் ஸ்டேஷன் வரை போய்விட்டது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அவரது கணவர் போன் செய்து, 3 முறை தலாக் சொல்லியதுடன், இதன்மூலம் விவாகரத்து செய்துவிட்டதாகவும் சொல்லி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீசுக்கு போன் மூலம் புகார் தந்தார்.
இந்த புகாரின் பேரில் இரு வீட்டாரையும் போலீசார் ஸ்டேஷனுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒன்றும் வேலைக்காகவில்லை... இரு தரப்புமே ஒத்து வரவில்லை. இதனால் போலீசார் முத்தலாக் சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டு விட்டதால் மனம் நொந்து போன பெண், மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அந்த வீட்டில் இருந்தவர்கள், பெண்ணை சரமாரி அடித்து உதைத்துள்ளனர். மேலும் கணவன் உள்ளிட்டோர், பெண்ணின் மூக்கையும் அறுத்துள்ளனர். விஷயம் கேள்விப்பட்டு பெண்ணின் தாயார், அங்கு சென்றிருக்கிறார். அவரையும் கல்லாலேயே அடித்து உதைத்துள்ளனர். இது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணை நடந்து வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications