ஜாலியோ ஜிம்கானா.. 100 நாளில் 10 ஆயிரம் பேருக்கு அரசு வேலை! தேர்வு வாரியங்களுக்கு யோகி அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் 100 நாட்களில் 10,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறையை துவங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்வு வாரியங்களின் தலைவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் 18 இடங்களில் வென்றன.
இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. முதல்வராக யோகி ஆதித்யநாத் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அவர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தேர்வு வாரிய தலைவர்களுக்கு உத்தரவு
இந்நிலையில் அவர் உத்தர பிரதேசத்தில் அரசு பணிகளுக்கான தேர்வு வாரிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்தவும், நிலுவை முறையை நீக்கி புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைந்து துவக்கவும் அறிவுறுத்தினார். மேலும், தேர்வுகள் நடத்துவதில் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக இருக்க வேண்டும். குறித்த காலக்கெடுவுக்குள் பணிகளை உரிய முறையில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தொழில்நுட்பங்களை பயன்படுத்த
மேலும் அனைத்து தேர்வு வாரியங்கள் சார்பிலான ஆட்சேர்ப்பு தேர்வு நடைமுறைகள் உள்துறையுடன் விரைவில் ஒருங்கிணைக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார். அத்துடன் ஆட்சேர்ப்பு செயல்முறை காலநீட்டிப்பு செய்வதாக இருக்க கூடாது. தேர்வு மையங்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். தேர்வு வாரியங்கள் ஆட்சேர்ப்பு நடைமுறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். இது பணிகளை விரைவாக முடிக்க உதவும் என அறிவுறுத்தினார்.

100 நாளில் 10,000 பேருக்கு அரசு வேலை
மேலும் மாநிலத்தில் அடுத்த 100 நாட்களில் 10,000 க்கும் அதிகமானவர்களுக்கு மாநில அரசு பணி வழங்க வேண்டும். இதற்கான நடைமுறையை தேர்வு வாரியங்கள் உடனே துவங்க வேண்டும் என யோகி ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. அடுத்த 100 நாட்களில், மாநிலத்தைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க அனைத்து சேவைகள் தேர்வு வாரியத்துக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். இதற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டினார். மேலும் அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்கள் அதிகமாக இருந்தாலும் நிதி பற்றாக்குறையால் நிரப்பப்படாமல் உள்ளது என அவர்கள் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் தான் யோகி ஆதித்யநாத் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications