தீப உற்சவ திருவிழாவுக்கு தயாராகும் அயோத்தி! சரவெடி வேகத்தில் வளர்ச்சி திட்டங்கள்! கலக்கும் உ.பி அரசு
லக்னோ: அயோத்தியில் பெரும்பாலான வளர்ச்சி திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அதேபோல மீதமுள்ள திட்டங்கள் வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்கு முன் முடிக்கப்படும் என்றும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் அயோத்தியை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தீப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதேபோல இந்த ஆண்டும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இருக்கிறது. திருமணமான பெண்கள் இறைவனை வேண்டி விளக்கேற்றுவதுதான் இந்த தீப உற்சவ நிகழ்ச்சியாகும். கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு அயோத்தியில் நிகழ்ச்சி கலைகட்ட இருக்கிறது. இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "அயோத்திக்கான வளர்ச்சி திட்டங்களில் பெரும்பாலானவை இந்த தீப நிகழ்ச்சிக்கு முன்னர் முடிவுறும்" என்று கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "அயோத்தியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த டபுள் என்ஜின் அரசு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்தது. அயோத்தியை பிரமாண்டமாகவும், தெய்வீகமாகவும் மாற்ற இந்த வளர்ச்சி திட்டங்கள் பயன்படும். ஒட்டுமொத்த அயோத்தியும் ஏற்கனவே தீபத் திருவிழாவிற்கு தயாராகிவிட்டது. சனாதனத்தை பின்பற்றும் அயோத்தி மக்கள் 500 ஆண்டுகால நிகழ்வு ஒன்றுக்காக தயாராகி வருகிறார்.
இது 2024ம் ஆண்டு அயோத்தியில் நடைபெறுகிறது. சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், தொடர்ச்சியான துப்புரவு முயற்சிகள் மற்றும் தேவைக்கேற்ப போதுமான பொது கழிப்பறைகள் இருக்க வேண்டும். அயோத்தி பகுதியில் தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், இடம்பெயர்ந்த மக்களுக்கு 100% மீள்குடியேற்றம் வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தீப உற்சவம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பானதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications