உத்தரப் பிரதேசத்தில் அப்டேட் ஆகும் அரசு மருத்துவமனைகள்! யோகி ஆதித்யநாத் எடுத்த முன்முயற்சி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனையில் புதிய மருத்துவ உபகரணங்கள் விரைவில் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் பேசுகையில், "மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க யோகி ஆதித்யநாத் உறுதி பூண்டுள்ளார். அதற்கேற்றார் போல பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை விரைவில் மேம்படுத்தப்பட இருக்கிறது. தற்போது ஆபரேஷன் தியேட்டர்களின் வருடாந்திர பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் தொடங்கியுள்ளன.

Yogi Adityanath cabinet orders to start upgradation of hospitals in Uttar Pradesh

லோஹியா மருத்துவமனையுடன் இணைந்த ராம் பிரகாஷ் குப்தா நினைவு தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையிலும் மருத்துவ எரிவாயு அமைப்புகளின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மருத்துவமனைகள் புதிய அடையாளத்துடன் செயல்படத் தொடங்கும். இதனை கொண்டாடும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

ஆர்எம்எல் மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள நான்கு மாடுலர் ஆபரேஷன் தியேட்டர்கள், இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தலா ஒரு மாடுலர் ஆபரேஷன் தியேட்டர் இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட இருக்கிறது. இது தவிர தரை தளத்திலும் ஒரு ஆப்ரேஷன் தியேட்டர் இருக்கிறது. இதுவும் புதிய வடிவத்தை எட்ட இருக்கிறது.

ஆப்ரேஷன் தியேட்டர்கள் மட்டுமல்லாது, மருத்துவமனையின் சுற்று சுவர்கள், கட்டிடத்தின் மேற்கூரைகளை வலுப்படுத்துதல், தரையமைப்பு, லேமினார் காற்றோட்ட அமைப்புகளை புதுப்பித்தல், நெகிழ் கதவுகளை சரி செய்தல், ஸ்க்ரப் அலகுகளுக்கு PVC இணைப்புகளை வழங்குதல், கண்ட்ரோல் பேனல்கள், எக்ஸ்ரே வியூ பாக்ஸ்கள், பிரஷர் ரிலீசிங் டம்ப்பர்கள் போன்றவையும் அமைக்கப்பட இருக்கின்றன.

இந்தப் பணிகள் முடிவடைந்தால், அறுவை சிகிச்சை அரங்குகளின் செயல்பாடு மேம்படுவதோடு, சிக்கலான அறுவை சிகிச்சை முறைகளும் எளிதாக்கப்படும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+