அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு. உத்தர பிரதேச அரசு எடுத்த முக்கிய முடிவு.. கையெழுத்து போடும் யோகி
லக்னோ: தீபாவளி பண்டிகையையொட்டி உத்தர பிரதேசத்தில் அரசு ஊழியர்களுக்கு மெகா கிப்ட் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்தி வழங்கி அறிவிக்கப்பட உள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். அங்கு அனைத்து தரப்பு மக்களுக்குமான நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டு படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி கொண்டாட அனைத்து மக்களும் தயாராகி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் உத்தர பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு கிப்ட் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த அவர் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 4 சதவீதம் வரை அகவிலைப்படியை உயர்த்த திட்டமிட்டுள்ளார். இதற்காக அறிவிப்பு என்பது விரைவில் வெளியாக உள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு தொடர்பான கோப்புகள் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளிக்கும் நிலையில் அது உடனடியாக அமலுக்கு வர உள்ளது. இதனால் அங்குள்ள அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வரும் பட்சத்தில் பல லட்சம் பேர் பயனடைய உள்ளனர்.
அதாவது மாநிலத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மேலும் தற்போது உயர்த்தப்படும் இந்த அகவிலைப்படி என்பது முன்தேதியிட்டு வழங்கப்படும். அதாவது ஜூலை 1ம் தேதி என்ற முன்தேதியிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதுதவிர அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக மத்திய அரசு சமீபத்தில் தனது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரித்தது. தமிழ்நாட்டிலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications