காசநோயை ஒழிக்க தீவிர முயற்சி.. நோயாளிகளுக்கு சத்தான உணவு! நிதி ஒதுக்கியது யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: வரும் 2025ம் ஆண்டுக்குள் உத்தரப் பிரதேசம் காசநோய் இல்லாத மாநிலமாக மாறும் என்றும், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சத்தான உணவு வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக நிக்ஷய் சத்துணவுத் திட்டத்தை' பலப்படுத்துவதாக அறிவித்துள்ளார். காச நோயாளிகளுக்கு சத்துணவு வழங்குவதற்காக இந்த திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாநில அரசும் முடிந்த அளவுக்கு இந்த திட்டத்தில் பங்களிக்கும் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தற்போது, உத்தரப் பிரதேசத்தில் 4.16 லட்சம் பேர் காசநோய் சிகிச்சை பெற்று வருகின்றனர் . SGPGI இன் நுரையீரல் துறையின் தலைவர் டாக்டர் ஜியா ஹாஷிம் கூறுகையில்,
"காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்கள் நோயால் ஏற்கனவே பலவீனமாக உள்ளனர். ஏராளமான காசநோய் மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது நோயாளிக்கு ஆதரவாக சத்தான உணவு தேவைப்படுகிறது. இதன் மூலம் காசநோயிலிருந்து மீண்டு வருவது மேலும் சுலபமாகும்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் முதலமைச்சர் அலுவலகம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து செப்டம்பர் மாதம் 17ம் தேதி வரை காசநோயாளிகளுக்கான சத்தான உணவு வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.78 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications