நகரமயமாக்கல் இருக்கட்டும்! ஆனால் காடுகளுக்கு பாதிப்பு வரக்கூடாது.. உ.பி முதல்வர் யோகி அதிரடி உத்தரவு
லக்னோ: அதிகரித்து வரும் நகரமயமாக்கல் வன விலங்குகளை பாதித்துவிடக் கூடாது என உத்தரப் பிரதேச அரசு பறவை மற்றும் விலங்குகளை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்திட யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ரூ.35 லட்சம் கோடி வரை மாநிலத்தில் முதலீடுகள் மேற்கொள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. புதிய தொழிற்சாலைகள் வர இருப்பதால் மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அதற்கேற்ப மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு என குறிப்பிட்ட 10 துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க துறைதான் வனத்துறை. அதிகரிக்கும் தொழிற்சாலைகள், மக்கள் பெருக்கம் ஆகியவை காடுகளின் பரப்பளவை வேகமாக குறைத்து வருகிறது. எனவே பல உயிரினங்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கியுள்ளன. எனவே இவற்றை பாதுகாக்கவும், எண்ணிக்கையை அதிகரிக்கவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தவிட்டுள்ளார்.
இதில் மாநில பறவையான சரஸ் கொக்கு மற்றும் மாநில விலங்கான சதுப்பு நில மான்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று யோகி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, "சரஸ் கொக்கு மற்றும் சதுப்பு நில மான்கள் வாழும் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அப்பகுதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்த வனப்பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்புகள் மேலும் விரிவாக்கம் செய்யப்படக்கூடாது. எனவே வனம், வீட்டுவசதி மற்றும் பொதுப்பணித்துறை ஆகிய துறைகள் இணைந்து ஒரு சிறப்பு திட்டம் தயாரிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications