அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடை நிற்றலை தடுக்க வேண்டும்! அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு
லக்னோ: அரசு பள்ளியில் மாணவர் இடை நிற்றலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, அதைத் தொடர்ந்து நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் என யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அதிரடி காட்டி வருகிறது. அந்த வரிசையில் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் கடந்ததையும் பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னர் இம்மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்த வேறு யாரும் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீடித்ததில்லை என்பதே இந்த கொண்டாட்டத்திற்கான காரணமாகும்.

இந்நிலையில் அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் விதமாக 'ஸ்கூல் சலோ அபியான்' எனும் பிரசாரத்தை யோகி ஆதித்யநாத் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைத்திருந்தார். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு மாநில பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர்ந்திருக்கின்றனர். பெரும்பாலும் 7-16 வயதுள்ள குழந்தைகள்தான் படிப்பை பாதியில் இடை நிறுத்திக்கொள்கிறார்கள். இவர்களை மையப்படுத்திதான் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் செயல்படுகின்றனர்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விஜய் கிரண் ஆனந்த் கூறுகையில், "அரசு பள்ளிகளில் 100 சதவிகித மாணவர் சேர்க்கையை உறுதி செய்வதில் உத்தரப் பிரதேச அரசு முன்னணியில் இருக்கிறது. இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவர்கள் பெரும்பாலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களை மீட்பதில் நாங்கள் குறிப்பிடத் தகுந்த வெற்றியை பெற்றிருக்கிறோம். எனவே உத்தரப் பிரதேசம் ஒருபோதும் குழந்தை தொழிலாளர்களை ஊக்குவிக்காது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அரசு பள்ளிகள் குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றலை முற்றிலுமாக தடுக்க வேண்டும். அதற்கான அனைத்து பணிகளையும் கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications