கல்வி நிலையங்களின் மையமாக மாறும் நொய்டா! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி அறிவித்த சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச அரசு கிரேட்டர் நொய்டாவை கல்வி நிலையங்களின் மையமாக மேம்படுத்த திட்டமிட்டிருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தொழில்துறை வளர்ச்சியை வேகப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக காலி மனைகளை விற்பனை செய்வதற்காக புதிய திட்டத்தை யோகி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதாவது, யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA) கிரேட்டர் நொய்டாவின் செக்டார்-28ல் உள்ள ஐந்து வகையான மனைகளை விற்பனை செய்யும். இதன் மூலம் குடியிருப்புகளை உருவாக்க விரும்பும் நிறுவனங்கள் இந்த நிலங்களை நியாயமான விலையில் வாங்கலாம்.

Yogi Adityanath has expressed hope that Noida will become a hub for educational institutions

அதன்படி பிரீமியம் ரூ.28.17 கோடி முதல் ரூ.176 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உத்தரப் பிரதேசத்தில் நிலம் ஆக்கிரமிப்பு பிரச்னை ஹெவியாக இருந்து வந்தது. பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். தற்போது இதன் தொடர்ச்சியாக நியாயமான விலையில் மனைகளை விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு இருக்கும் என நம்புவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த நிலங்களில் கல்வி மையங்களை கட்ட முதலீட்டாளர்களுக்கு யோகி அதித்யநாத் அழைப்பு விடுத்திருக்கிறார். ஜீவார் விமான நிலையம், சர்வதேச திரைப்பட நகரம், யமுனா எக்ஸ்பிரஸ் வழித்தடம் மற்றும் புத்தா சர்க்யூட் ஆகியவை அருகில் இருப்பதால் முதலீட்டாளர்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளால் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். அதேபோல இந்த திட்டம் பாங்க் ஆஃப் பரோடாவுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இந்த இடத்தில் நிலத்தை வாங்குபவர்கள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை அமைப்பதாக இருப்பின் அவர்களுக்கு முன்னுரிமை மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் என்று யோகி கூறியுள்ளார். இதன் மூலம் நொய்டா விரைவில் கல்வி நிலையங்களின் மையமாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+