உயிருக்காக மன்றாடும் மாஃபியாக்கள்! உ.பி சட்டம் ஒழுங்கில் தலைகீழ் மாற்றம்.. சாதித்து காட்டிய யோகி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகள் தற்போது தங்கள் உயிருக்காக மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் வன்முறைகள் மற்றும் கலவரங்கள் பாதியாக குறைந்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "கடந்த ஆட்சி காலத்தில் மாநிலம் முழுவதும் மாஃபியாக்களின் தொல்லை அதிகமாக இருந்தது. ஏராளமான ஏழை மக்களிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டது. இதனால் நிலத்தை இழந்த மக்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

ஆனால் காவல் துறையினரும் குற்றவாளிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தனர். 2017க்கு பிறகு இந்த நிலைமை தலைகீழாக மாறியது. மாஃபியாக்கல் தேடி தேடி வேட்டையாடப்பட்டன. மாஃபியா+காவல்துறை=உத்தரப் பிரதேசம் என்று கடந்த கால ஆட்சியாளர்கள் இந்த மாநிலத்தை மாற்றியிருந்தனர். அவர்களுக்கு மாஃபியாக்களிடமிருந்து நிதி குவிந்தது. இதனால் இந்த மாநில மக்கள் குறித்து அவர்கள் துளி கூட கவலைப்படவில்லை. ஆனால் இந்த உலகம் எப்போதும் சுற்றிக்கொண்டேதான் இருக்கிறது.
எனவே எதுவும் இதில் நிரந்தரமில்லை. அப்படிதான் பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பின்னர் ஏற்பட்ட மாற்றங்களை இந்த நாடே பார்த்துக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்த மாநிலத்தில் நடக்கும் என்கவுன்ட்டர்கள் குறித்து விமர்சிக்கின்றனர். ஆனால் இந்த என்கவுன்ட்டர்கள்தான் குற்றவாளிகளை ஒடுக்கியுள்ளது. ஒரு காலத்தில் மற்றவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றவாளிகள் தற்போது தங்கள் உயிரை காப்பாற்ற அரசாங்கத்திடம் மன்றாடிக்கொணடிருக்கின்றனர். அதேபோல கடந்த காலத்தில் மாநிலத்தின் தொழிற்துறையானது மந்த கதியில் இயங்கிக்கொண்டிருந்தது.
உத்தரப் பிரதேசத்தின் ப்ளஸ் பாயிண்ட் சர்க்கரை உற்பத்திதான். ஆனால் சர்க்கரை தொழிற்சாலைகளை நடத்த கடந்த கால அரசுகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதன் காரணமாக கரும்பு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயிகள் மனமுடைந்தனர். அதேபோல இளைஞர்கள் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல தொடங்கினர். இதனால் உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்ட பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றவுடன் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து உத்தரப் பிரதேசத்தை புதுப்பொலிவு பெற வைத்தது.
மாநிலத்திலிருந்து புலம் பெயர் தொழிலாளர்களாக வெளியே சென்றவர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர். அவர்கள் புதிய அரசு மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார். இதற்கெல்லாம் முக்கிய காரணம் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கும் தொழிற் வளர்ச்சியும்தான். 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 170 குற்றவாளிகள் என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர்கள். காவல்துறையினரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர்கள். இவர்களின் மரணம் மக்களின் நம்பிக்கையாக மாறியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications