உ.பியில் மாஃபியாக்களிடமிருந்து பாஜக அரசு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டுள்ளது! யோகி ஆதித்யநாத் பேச்சு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச அரசு தற்போது வரை ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டிருக்கிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "முன்னெப்போதும் இல்லாத அளவில் 2023-2024ம் ஆண்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. கல்வி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவத்திற்கு இம்முறை அதிக நிதியும் ஒதுக்கப்பட்டது. மட்டுமல்லாது மாநிலத்தின் வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த அத்தனையும் நிறைவேற்றியிருக்கிறது.

Yogi Adityanath has said that the BJP government has recovered Rs 1,800 crore worth of encroached lands in UPso far

இதன் காரணமாக இம்மாநிலம் மீதான கண்ணோட்டம் மாறியிருக்கிறது. மெட்ரோ ரெயில்கள் மற்றும் PMAY, சௌபாக்யா மற்றும் உஜ்வாலா திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு முயன்று வருகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் கூட்டு முயற்சியால்தான் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநில அரசு தனது இலக்குகளை அடைய பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பெரும் உதவிபுரிந்தனர்.

கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் மாநிலம் முழுவதும் ரவுடிகளையும், மாஃபியா டான்களையும் சுதந்திரமாக உலவ அனுமதித்தார்கள். ஆனால் தற்போது இது முற்றிலுமாக குறைந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் மீதான கோபத்தை எதிர்கொள்கிறார்கள். மறுபுறம் அரசு ரூ.1,800 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டிருக்கிறது. நாங்கள் எங்களுக்கு என சொந்தமாக வீடுகளை உருவாக்கிக்கொள்ளவில்லை. ஆனால் 42 லட்சம் பேருக்கு இலவச வீடுகளை வழங்கியுள்ளோம்.

உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் இருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இது தடுக்கப்பட்டது. பலர் ரேஷன் அட்டைகளை முறைகேடாக வைத்திருந்தனர். இதனால் உரியவருக்கு ரேஷன் அட்டை இல்லாமல் போய்விட்டது. இதனையடுத்து 80, ரேஷன் கடைகளை நாங்கள் e-PoS இயந்திரங்களுடன் இணைத்துள்ளோம். இதன் மூலம் போலி கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+