அனைவருக்கும் வீடு என்பதில் உறுதியாக இருக்கிறோம்! உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இனி எவருக்கும் வீடு இல்லை என்கிற நிலை இருக்காது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.
எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையடுத்து உத்தரப் பிரதேசத்திற்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதேபோல மாநில அரசு சார்பிலும் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை யோகி ஆதித்யநாத் அரசு நடத்திக்காட்டியது. அதேபோல சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பட்ஜெட்டிலும் இதுவரை இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

மேலும், உட்கட்டமைப்பு வளர்ச்சி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அம்மாநில நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியிருந்தார். இப்படி இருக்கையில் உட்கட்டமைப்பு தொடர்பாக பல புதிய அறிவிப்புகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது மாநிலத்தில் வசிக்கும் அனைவருக்கும் வீடு என்கிற திட்டம் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "கடந்த 6 ஆண்டுகளில் நகரப்புறங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியானது அபரிமிதமானது. இந்த வளர்ச்சி தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்தகட்ட வளர்ச்சியானது முற்றிலும் சாத்தியமாக வேண்டுமெனில் அனைவருக்கும் வீடு என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதுதான் மக்களின் வளர்ச்சியாகும். அவர்களை விட்டு விட்டு வெறுமென கட்டிடங்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்? எனவே இந்த வளர்ச்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
எனவே உத்தரப் பிரதேசத்தில் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்யும் விதமாக 'உத்தரபிரதேச நகரமயமாக்கல் கொள்கை-2023ஐ' யோகி ஆதித்யநாத் மறு ஆய்வு செய்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications