துணிச்சல் மிக்க காவலர்களின் நலனை உ.பி அரசு நிச்சயம் பாதுகாக்கும்! யோகி ஆதித்யநாத் உறுதி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: குற்றங்களை எதிர்த்து துணிச்சலோடு போராடும் காவல்துறையினரின் நலனை காக்க உத்தரப் பிரதேச அரசு உணர்வுப்பூர்வமுடன் உறுதி பூண்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த காவலர் தின அணிவகுப்பில் பங்கேற்றிருந்த அவர், குற்றங்களை எதிர்த்து துணிச்சலோடு போராடும் காவல்துறையினரின் நலனை காக்க உத்தரப் பிரதேச அரசு உணர்வுப்பூர்வமுடன் உறுதி பூண்டிருப்பதாக கூறியுள்ளார்.

Yogi Adityanath has said that the UP government is committed to protect the welfare of the brave constables

இந்த ஆண்டில் மட்டும் மூன்று காவல்துறையினர் பணியில் இருக்கும் போது குற்றங்களுக்கு எதிராக தீரமுடன் போராடி உயிரை தியாகம் செய்திருக்கின்றனர். இவர்களின் தியாகம்தான் ஒட்டுமொத்த காவல்துறையின் உத்வேகத்திற்கு ஆதாரமாக இருக்கிறது. அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் வலுவான பொறுப்புணர்வுடன் இவர்கள் தங்களின் கடமையை நிறைவேற்றியுள்ளனர். சவாலான சூழ்நிலைகளிலும், தங்கள் கடமைகளின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தி, மாநிலத்திற்குள் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான மற்றும் ஆரோக்கியமான சட்டம் மற்றும் ஒழுங்கு முறையைப் பராமரிக்கவும் இந்த தியாகம் வழிக்காட்டியாக இருக்கும்.

கடந்த 2019ம் ஆண்டிலிருந்து 1 மக்களவை தேர்தல், 1 சட்டமன்ற தேர்தல், இது தவிர பஞ்சாயத்து தேர்தல்கள், கொரோனா தொற்று என பல்வேறு தொடர் இக்கட்டான சூழலை காவல்துறையினர் சிறப்பாக எதிர்கொண்டு பணியாற்றியுள்ளனர். காவல்துறையினரின் நலனுக்காக ஒட்டுமொத்தமாக ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் நலன்களை இந்த அரசு உறுதியுடன் பாதுகாக்கும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+