நகர்ப்புற வளர்ச்சி காலத்தின் தேவை! வல்லரசு இந்தியாவுக்கு இது முக்கியம்.. யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அவர், நகர்ப்புற வளர்ச்சி என்பது காலத்தின் தேவை என்றும், வல்லரசு இந்தியாவுக்கு இது முக்கியம் எனவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
கோரக்பூரில் நேற்று ரூ.233.20 கோடியில் 303 வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், "இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றுவதற்கு நகர்ப்புற வளர்ச்சி என்பது அடிப்படையானது. இந்த நிகழ்ச்சியில் நான் 189 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். அதேபோல 114 முடிவுற்ற திட்டங்களை தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்திருக்கிறேன். ஒரு நகரம் உருவாகிறது எனில் அங்கு திடக்கழிவு மேலாண்மை என்பது மிகவும் அவசியமாக இருக்கிறது.

இந்த திடக்கழிவு மேலாண்மைக்கு ஏற்ப மக்கும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்க கோரக்பூர் நகராட்சி மற்றும் தேசிய அனல்மின் நிலையம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது எதிர்வரும் 25 ஆண்டுகளில் சுமார் ரூ.600 கோடியை இது நமக்கு மிச்சப்படுத்தும். ஒரு நகராட்சியின் வளர்ச்சிக்கு குப்பைகளை சரியாக கையாள்வது மிகவும் அவசியம். அதேபோல ஸ்மார்ட் சிட்டி எனும் கனவை நனவாக்குவதில் திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் கடந்த 6 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு விஷயத்தில் நாம் பாரபட்சம் பார்ப்பது கிடையாது. இதன் காரணமாக இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். இப்படி இருக்கையில் தொழில் வளர்ச்சியையும் மேம்படுத்துவது அவசியமாக இருக்கிறது. அதற்கு நகர்ப்புற வளர்ச்சி முக்கியம். எனவே இந்த அரசு தற்போது அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications