உ.பி பொருளாதார வளர்ச்சியில் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பங்கு குறிப்பிடத்தக்கது! யோகி பேச்சு
லக்னோ: மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் சிறுகுறு நிறுவனங்களின் பங்கு அளப்பரியது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்திருந்தவர்கள் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவியில் இருந்ததில்லை.

இந்நிலையில் 6 ஆண்டு வெற்றியை கொண்டாடும் விதமாகவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் நோக்கி நகர்த்த தொடர்ந்து முயன்று வருகிறார். இந்நிலையி8ல் மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியையும் கண்காணிக்கவும், அதில் தேக்கம் ஏற்பட்டால் அதை சரிசெய்யவும் புதிய யோசனை ஒன்றை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களை பதிவு செய்ய போர்ட்டல் ஒன்றை அரசு உருவாக்கியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இந்த போர்ட்டலை அரசு உருவாக்கியது. தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தில்தான் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 90 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும், ஆனால் இதில் வெறும் 14 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் சரியாக சென்று சேர்வதில்லை என்றும், இதனால் மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி பாதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. எனவே இதனை சரி செய்யதான் இந்த போர்ட்டல் உருவாக்கப்பட்டது. இது எம்எஸ்எம்இகளை ஒன்றிணைக்க பெரிய அளவில் உதவியுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் அதிகரித்திருக்கிறது என்றும் அவர் பெருமை தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications