வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உ.பி அரசு முதலிடம்! வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக.. யோகி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வேலை வாய்ப்புகள் குறித்த வாக்குறுதியை பாஜக அரசுதான் நிறைவேற்றியுள்ளது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் வேலை வாய்ப்புகள் குறித்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது என பெருமையுடன் கூறியுள்ளார்.

Yogi Adityanath is proud that the BJP government is fulfilling its promises regarding job opportunities

மதன் மோகன் மாளவியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினார். இதனையடுத்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை சரியாக நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, வேலை வாய்ப்பு விஷயத்தில் நாங்கள் எந்த சமரசமுமின்றி வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். ஒரு காலத்தில் நமது மாநிலத்திலிருந்து வெவ்வேறு மாநிலங்களுக்கு வேலைக்காக இளைஞர்கள் பலர் புலம் பெயர்ந்தனர். ஆனால் தற்போது இந்நிலை மாறியுள்ளது.

அதாவது, இளைஞர்கள் நமது மாநிலத்தில் இருக்கும் வளங்களை கொண்டே வேலை வாய்ப்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக மாறுவதில்லை. இது பாஜக அரசின் மிகப்பெரிய சாதனை. இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் சுய தொழில் தொடங்க சுமார் ரூ.500 கோடி அளவில் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+