பெண்களின் பொருளாதாரத்தை பலமாக்கிய சூப்பர் திட்டம்! உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மிஷன் சக்தி திட்டம் மூலம் பெண்களின் பொருளாதாரம் பலமடைந்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். அதில் ஒன்றுதான் மிஷன் சக்தி திட்டம். இந்த திட்டத்தின் 4வது பகுதி விரைவில் தொடங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காக மாநில அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குற்றவாளிகள் மற்றும் தவறு செய்பவர்களுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது தற்போதும் நீடித்து வருகிறது. இதை முதலமைச்சரான நானே மேற்பார்வை செய்து வருகிறேன்.
இது தவிர தலைமைச் செயலாளர் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார், மேலும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) இந்தக் குற்றங்கள் தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு சரியான நேரத்தில் உத்தரவுகளை வழங்குகிறார், இதன் விளைவாக இதுபோன்ற குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் கணிசமான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆகஸ்ட் 4 நிலவரப்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான 98.10 சதவீத வழக்குகளை தீர்த்து வைத்திருக்கிறது.
அதேபோல நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து தீர்வு காண்பதிலும் நாங்கள் விவேகமாக செயல்பட்டு வருகிறோம். பெண்கள் தொடர்பான குற்றங்களை ஒடுக்க, பவர் மொபைல், மகளிர் உதவி மையம் 1090, மகளிர் போலீஸ் பீட் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர மகளிர் புகார் போலீஸ் சௌகி ஆலோசனை மையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. உ.பியில் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் , கடந்த 6 ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான கிராமப்புற பெண்கள் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட சுயஉதவி குழுக்கள், 54,657 கிராம அமைப்புகள் மற்றும் 2,935 கிளஸ்டர் அளவிலான கூட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டம் பெண்களின் பொருளாதாரத்தை பலப்படுத்தியுள்ளது" என கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications