காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளிகள்! அசத்தும் உ.பி.. யோகி ஆதித்யநாத் பாராட்டு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஆயுதப்படை காவலர்களின் தியாகம் அளப்பரியது என முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்திருக்கிறார். மேலும் காவலர்களின் குழந்தைகள் சிறப்பான கல்வியை பெற 31 போலீஸ் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில், மாநில ஆயுதப்படை காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், "கடந்த 2001ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலை முறியடித்ததில் மாநில ஆயுதப்படை காவல்துறையினருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அவர்களின் தியாகம்தான் இன்று மாநிலத்தில் அமைதி நிலவுவதற்கான காரணமாக இருக்கிறது. எனவே இவர்களின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் அந்த பணியை சிறப்பாக செய்துவருகிறோம்.
காவலர்களின் குழந்தைகள் சிறப்பான கல்வியை பெற 31 போலீஸ் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆயுதப்படையில் 41,893 கான்ஸ்டபிள்களையும் 698 படைப்பிரிவு கமாண்டோக்களையும் இந்த அரசு புதியதாக நியமித்திருக்கிறது. பிஏசியில் பதவி உயர்வுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதற்காக, ஆயுதப்படை போலீஸ் படையில் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்களின் எண்ணிக்கையை முறையே 184 மற்றும் 3,772 ஆக அரசு உயர்த்தியுள்ளது. காவல்துறையில் மற்ற பிரிவில் இருப்பவர்களை விட ஆயுதப்படையில்தான் பதவி உயர்வு விரைவில் வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications