பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்த உத்தரப் பிரதேசம்! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன எனவும் யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வட மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகின்றன. எனவே இந்த எண்ணிக்கையை குறைக்குமாறு மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநில அரசு இக்குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Yogi Adityanath is proud that the safety of women and children has been ensured in Uttar Pradesh

இதன் விளைவாக, தேசிய அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தை எட்டியிருக்கிறது. சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி முதல் இந்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி வரை உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உத்தரப் பிரதேசம் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தீவிரமாக எதிர்வினையாற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை குறிப்பிட்டு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார். ஐபிசி பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை மாநில காவல்துறையினர் சிறப்பாக கையாண்டு அதற்கான தீர்வையும் விரைவில் கண்டுபிடித்துள்ளனர். அதாவது இக்குற்றங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால் இதில் குற்றச்சாட்டப்பட்ட நபரை உடனடியாக கைது செய்வது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பது. பாதிக்கப்பட்ட நபருக்கான பாதுகாப்பை உறுதி செய்வது போன்றவற்றை காவல்துறையினர் சிறப்பாக செய்து வருகின்றனர் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+