அரசு பள்ளி குழந்தைகளுக்கு உ.பி அரசு அறிவித்த சூப்பர் திட்டம்! அசத்தும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 3-6 வயது குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமல்படுத்தியுள்ளார். திட்டத்தை தொடங்கி வைத்த அவர், நல்ல ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள்தான் வலுவான இந்தியாவுக்கு அடிப்படை என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் 3-6 வயது குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை தொடங்கியுள்ளார். அயோத்தியில் உள்ள ஒரு கூட்டுப் பள்ளியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த அவர், குழந்தைகள்தான் வலுவான இந்தியாவுக்கு அடிப்படை என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், "500 ஆண்டுகளுக்குப் பிறகு ராமர் மீண்டும் கோயிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட இருக்கிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விற்கு முன், 3-6 வயது குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது 35 மாவட்டங்களில் ரூ.403 கோடியில் 3,401 அங்கன்வாடி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள துறைகள் ஒன்றுடன் ஒன்று ஒருங்கிணைந்து பயணித்தால் வளர்ச்சி எளிதில் சாத்தியமாகும். கடந்த காலத்தில் நாம் இப்படிதான் பணியாற்றி இருக்கிறோம். உதாரணமாக மூளை காய்ச்சலை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த 40 ஆண்டுகளில் 5 லட்சம் குழந்தைகளின் உயிரை இது பறித்திருக்கிறது. ஆனால் நம்முடைய கூட்டு முயற்சியால் நாம் வெறும் 4 ஆண்டுகளில் இதை ஒழித்து கட்டினோம்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications