புதுப்பொலிவு பெறும் மிர்சாபூர்! ரூ.202 கோடியில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரில் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக ரூ.202 கோடி மதிப்பீட்டில் 660 திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மிர்சாபூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக 660 திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மிர்சாபூரில் உள்ள மா விந்தியவாசினி கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவராத்திரி நிகழ்ச்சியில் முந்தைய ஆண்டை விட சமீப ஆண்டுகளில் ஏராளமான அளவில் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். எனவே அவர்களின் வசதிக்காக கோயிலுக்கு பிரமாண்ட நடைப்பாதை அமைக்கப்படுகிறது. அதுபோல மாவட்டம் முழுவதும் தொழில் வளர்ச்சிய பெருக்குவதற்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல முன்பு இருந்ததைவிட தற்போது மாநிலம் முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் அதிகாரமளிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உலகிற்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்திருக்கிறது. இது நமது மாநிலத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதல்படி உத்தரப் பிரதேசம் மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் பாஜகவின் சித்தாந்தத்தால்தான் சாத்தியமாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications