இந்தோ-திபெத்திய எல்லையில் உள்ள பள்ளிகளை மேம்படுத்த கூடுதல் நிதி! அசத்தும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இந்தோ-திபெத்திய எல்லையில் உள்ள பள்ளிகளை மேம்படுத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த பள்ளிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில் யோகியின் உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் உ.பியில் இந்தோ திபெத் எல்லையில் உள்ள பள்ளிகளை மேம்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

பல்நோக்கு மையங்களுக்கு அருகில் உள்ள 16 பள்ளிகளையும், இந்திய-நேபாள எல்லையில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள பள்ளிகளையும் மேம்படுத்தும் திட்டத்திற்கு தற்போது அவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். இந்நிலையில் ரூ.8.5 கோடி செலவில் இந்த பள்ளிகளை மேம்படுத்த யோகி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல 57 மாவட்டங்களில் நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி கூட்டுப் பள்ளிகளைத் தொடங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாநிலங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் உள்ள ஒன்பது பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.3.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள சர்வதேச வழித்தடத்தில் அமைந்துள்ள ஏழு பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான மற்ற திட்டத்திற்கு ரூ.4.73 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications