அடுத்த 100 ஆண்டுகளுக்கு பேர் சொல்லும் கட்டுமானம்! வேற லெவலில் மாறும் லக்னோ! அசத்தும் யோகி ஆதித்யநாத்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவை சுற்றி புதிய நகர கட்டமைப்பு உருவாக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார். இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

Yogi Adityanath plans to build new structures around Lucknow

இந்நிலையில் உ.பி தலைநகர் லக்னோவை மேலும் மேம்படுத்தும் நோக்கில், லக்னோவை சுற்றி புதிய நகர கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். அதாவது டெல்லியில் என்சிஆர் இருப்பதை போல, லக்னோவில் எஸ்சிஆர் அமைக்கப்படும். கடந்த 17ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையை ஆய்வு செய்த அவர் இதனை கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், "மாநில தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தை 3 மாதங்களுக்குள் அமைக்க உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்த திட்டத்தில் லக்னோ தவிர உன்னாவ், ஹர்தோய், ரேபரேலி, சீதாபூர் மற்றும் பாரபங்கி ஆகிய நகரங்களும் சேர்க்கப்படும். இதன்மூலம் இந்த நகரங்களில் முக்கியமான அரசு அலுவலகங்கள் பிரிந்து இயங்கும். எனவே மக்கள் ஒரே இடத்தில் குவிவது தடுக்கப்படும். இவை அனைத்தும் அடுத்த 100 ஆண்டுகளின் தேவையை மனதில் கொண்டு உருவாக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். இந்த திட்டத்திற்கு உ.பியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+