யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் கேசவ் பிரசாத் மவுரியா உட்பட 2 துணை முதல்வர்கள்
லக்னோ: உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்றார். இவரை தொடர்ந்து தேர்தலில் தோல்வியடைந்த கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதாக் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்று கொண்டனர். இவர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டதன் பின்னணி விபரம் வெளியாகி உள்ளது.
Recommended Video
உத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 403 இடங்களில் பாஜக 255 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வென்ற இடங்களை சேர்த்தால் இது 273 தொகுதிகளாக உயரும்.
இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியேற்பு விழா லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு யோகி ஆதித்யநாத் புதிய முதல்வராக பதவியேற்று கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பாஜக முன்னணி தலைவர்களும், பிற கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

2 துணை முதல்வர்கள்
யோகி ஆதித்யநாத்துடன் துணை முதல்வர்களாக 2 பேர் பதவியேற்றனர். இதில் ஒருவர் பெயர் கேசவ் பிரசாத் மவுரியா, இன்னொருவரின் பெயர் பிரஜேஷ் பதாக் என்பதாகும். இதில் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த முறையும் துணை முதல்வராக இருந்தார். கடந்த முறை துணை முதல்வராக இருந்த தினேஷ் சர்மாவுக்கு இந்த முறை அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. அவருக்கு மாற்றாக பிரஜேஷ் பதாக் துணை முதல்வராகி உள்ளார்.

தோற்றவருக்கு பதவி
இதில் கேசவ் பிரசாத் மவுரியா கடந்த முறையும் துணை முதல்வராக செயல்பட்டார். இந்த முறை சிராது தொகுதியில் போட்டியிட்ட அவர் கேசவ் பிரசாத் மவுரியா போட்டியிட்டார். இதில் சமாஜ்வாதி கட்சியின் பல்லவி படேலிடம் 7 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும் அவருக்கு கடந்த முறையை போன்று தற்போதும் துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன
ஏனென்றால் இவர் உத்தர பிரதேசத்தில் ஓபிசி பிரிவில் செல்வாக்கான தலைவர். மேலும், சாதாரண குடும்பத்தை சேர்ந்த இவர் தனது பெற்றோரின் விவசாயத்துக்கும், டீ கடை, செய்தித்தாள் விற்பனைக்கு உதவி செய்து வந்தார். அதன்பிறகு ராமர் கோயில் கட்டும் இயக்கத்திலும், ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தளம் உள்ளிட்ட அமைப்புகளிலும் செயல்பட்டார். இதனால் தான் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் எம்எல்சியாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

அமைச்சர் டூ துணை முதல்வர்
இதேபோல் இன்னொரு துணை முதல்வராக பிரஜேஷ் பதாக், லக்னோ கன்டோன்மெண்ட் தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 8 ஆயித்து 147 ஓட்டுக்கள் பெற்று சமாஜ்வாதி கட்சியின் சுரேந்திர சிங் காந்தியை வீழ்த்தி வெற்றி பெற்றார். இவர் கடந்த முறை யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் சட்டத்துறை உள்பட பிற துறை அமைச்சரவையில் அமைச்சராக செயல்பட்டு தற்போது துணை முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

பிராமின் சமுதாயத்தை சேர்ந்தவர்
இவர் 2004 முதல் 2009 காலக்கட்டத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் உன்னாவ் தொகுதி எம்பியாக இருந்தார். 2017 ல் அமித்ஷா முன்னிலையில் பாஜக கட்சிக்கு வந்தார். பிராமின் சமுதாயத்தை சேர்ந்த இவர் 2017 சட்டசபை தேர்தலில் லக்னோ கன்டோன்மெண்ட் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சரானார். தற்போது அதே தொகுதியில் வென்று துணை முதல்வராகி உள்ளார். கடந்த முறை பிராமின் சமுதாயத்தை சேர்ந்த தினேஷ் சர்மா துணை முதல்வராக இருந்தார். இந்த முறை இவர் கழற்றி விடப்பட்டுள்ள நிலையில் அதிர்ஷ்டக்காற்று பிரஜேஷ் பதாக் பக்கம் அடித்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications