கற்றல் திறனை மேம்படுத்த 1 லட்சம் பள்ளிகளுக்கு இலவச டேப்லெட்! அசத்தும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியர் தினமான நாளை உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு லட்சம் பள்ளிகளுக்கு இலவச டேப்லெட்களை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யோகி ஆதித்யநாத் பள்ளி கல்வியை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து அவர் கூறுகையில், "இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் இந்த உத்தரவு.

'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதை தான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 75 நிபுன் தொகுதிகள் உருவாக்கப்படும். இந்த தொகுதிக்குள் 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் அடங்கும்.
இதன் மூலம் எதிர்வரும் 2026-2027ம் ஆண்டிற்குள் அனைத்து மாணவர்களுக்கும் 3 வகுப்பில் முழுமையான எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்றிருப்பார்கள். இதற்கு சமக்ரா ஷிக்ஷாவின் மத்திய நிதியுதவி பயன்படுத்தப்படும். ஏற்கெனவே பள்ளிகளை மேம்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. விரைவில் அதன் முழு பலன் தெரிய வரும்" என்று கூறியுள்ளார். மேலும் நாளை நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுமார் 1 லட்சம் பள்ளிகளுக்கு இலவச டேப்லெட்களை வழங்கும் திட்டத்தை யோகி ஆதித்யநாத் நாளை தொடங்கி வைக்கிறார்.
பள்ளிக் கல்வியை மேம்படுத்தவும், கற்றலை எளிமையாக்கவும் இதுபோன்று டேப்லெட்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கெனவே சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 1 லட்சம் டேப்லெட்கள் விநியோகிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications