உ.பி மக்களின் கனவுக்கு குறுக்கே நிற்கும் அதிகாரிகள்! கடுமையாக எச்சரித்த முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சில அரசு அதிகாரிகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
உ.பியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மூலம் ரூ.34 லட்சம் கோடி வரை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மாநிலத்தின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் மற்றொரு நிகழ்வும் இடம் பிடித்துள்ளது. அதாவது, உ.பி முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதுவரை இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்ததில்லை.

எனவே யோகி ஆதித்யநாத் ஆட்சியின் 6 ஆண்டுகள் நிறைவு விழாவை பாஜக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முடிவுற்ற திட்டங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் சில மாவட்டங்களில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
மறுபுறம் சட்டம் ஒழுங்கை காப்பதிலும் காவல் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக தொடர் புகார்கள் எழுந்திருக்கிறது. எனவே இந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தற்போது யோகி ஆதித்யநாத் அரசு முடிவெடுத்திருக்கிறது. இது குறித்து இன்று விளக்கியுள்ள யோகி ஆதித்யநாத், "மக்கள் குறைகளை சரி செய்யாத அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
சாதாரண போலீஸ் ஸ்டேஷன் காவலர் தொடங்கி அரசின் உயர் மட்ட அதிகாரிகள் வரை இந்த தவறை செய்துள்ளார்கள். இவர்களுக்கு ஏற்கெனவே பல முறை வார்ணிங் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. எனவே மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது" என்று கூறியுள்ளார். இது அம்மாநில அரசு அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications