மதுரை சித்திரை திருவிழா: வைகையாற்றில் கூட்ட நெரிசல்.. இருவர் பலி.. 11 பேர் காயம்
மதுரை: மதுரை வைகையாற்றில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை பார்க்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலால் மதுரையில் உலக புகழ்பெற்ற சித்திரை திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள கடந்த இரு ஆண்டுகளாக அனுமதி கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த வைபவத்தை பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் காண்பதற்காக பிரத்யேக ஏற்பாடுகள் நடைபெற்றன.
இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை அடுத்து சித்திரை திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது.

சித்திரை திருவிழா
பொதுவாக இந்த சித்திரை திருவிழாவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. வைகை ஆற்றுக்கு தங்கக் குதிரை வாகனத்தில் ஏறி வந்த கள்ளழகரை பார்க்க வைகை ஆற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்து வருவதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அழகர் வைபவத்தை காணும் போது சிலர் முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.

இருவர் பலி
இந்த நிலையில் மூச்சுத்திணறலால் ஒரு பெண் உள்பட இருவர் உயிரிழந்துவிட்டனர். அது போல் மேலும் 11 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக்குரியதாக இருப்பதாக தெரிகிறது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெறுகின்றன. இருவரது உடல்களும் மதுரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

அடையாளம் காணும் பணிகள்
இறந்தவர்களின் புகைப்படத்தை சமூகவலைதளங்களிலும் அரசு இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என தெரியவந்தது. இன்னொருவர் மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்த 65 வயதாகும் ஜெயலட்சுமி என்பது தெரியவந்தது. மூச்சுத்திணறலால் அவர்கள் இருவரும் தவித்த போது ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர்வதற்கு கூட வழியில்லாத நிலையில் இருந்ததால் இருவரும் சிகிச்சை கொடுப்பதற்கு முன்பே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

உதவி எண்
வைகையாற்றில் ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் நிலையை அறிய 94980 42434 என்ற உதவி எண்ணில் கொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வைகையாற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியும் பக்தர்கள் இறங்கியதால இந்த நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இரு ஆண்டுகளுக்கு பிறகு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காணலாம் என ஆசையாக வந்த நிலையில் இப்படியொரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications