மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு
மதுரை: மதுரையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 15-ஐ தாண்டியது. அது போல் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 3 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 6 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 2 பேர் மதுரையில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் ஆவர்.

மதுரை
ஈரோட்டில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 3 தாய்லாந்து நாட்டினரிடம் இருந்து மதுரையைச் சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் கடந்த இரு தினங்களுக்கு முன் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரத்தக் கொதிப்பு
இதையடுத்து அவருக்கு 24-ஆம் தேதி மாலை முதல் உடல்நிலை மோசமானது. அவர் நுரையீரல் அடைப்புக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார். அது போல் அவருக்கு ரத்தக் கொதிப்பும், சர்க்கரை அளவும் கட்டுப்பாடில்லாமல் இருந்தது.

நபர்
இதையடுத்து அவர் 25-ஆம் தேதி அதிகாலை பல்வேறு உறுப்புகள் கோளாறு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து இவருக்கு மதுரை அண்ணாநகரில் இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்த சடங்கில் 4 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதையடுத்து இவர் வாழ்ந்த தெரு சீல் வைக்கப்பட்டது.

4 பேருக்கும் பாதிப்பு
இந்த நிலையில் இறந்த நபரின் குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை போல் இன்று கொரோனா பாதிப்புள்ள 4 பேரும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தொற்றிக் கொண்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications