கிரில் சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேர் மருத்துவமனையில் அனுமதி! ஷாக்கில் மதுரை
மதுரை அருகே சோழவந்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 3 குழந்தைகள் உட்பட 22 பேர் வாந்தி, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டும் இதேபோன்று ஷவர்மா சாப்பிட்ட பலருக்கும் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக பலரும் ஷவர்மா சாப்பிடுவதை தவிர்த்தனர். தற்போது கிரில் சிக்கன் சாப்பிட்டவர்களுக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோழவந்தானில் உள்ள உணவகத்தில் நேற்று இரவு கிரில் சிக்கன் மற்றும் தந்தூரி சிக்கன் வாங்கி சாப்பிட்ட 22 பேருக்கு நள்ளிரவு முதல் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. கூடைப்பந்து விளையாட வந்த பிரசன்னா என்ற வீரர் தனது நண்பர்கள் 10 பேருடன் இந்த உணவகத்தில் சிக்கன் வாங்கி சாப்பிட்டுள்ளார். அவர்களுக்கும் உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் சோழவந்தான் அரசு மருத்துவமனை மற்றும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சோழவந்தான் அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் உட்பட சிலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உணவகத்தில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உடனடியாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். மேலும், சோழவந்தான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோட்டலில் இருந்த உணவு மற்றும் நேற்று பயன்படுத்தப்பட்ட சிக்கன் ஆகியவற்றை கைப்பற்றிய உணவு பாதுகாப்புத் துறையினர், அதனை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். ஒரே இரவில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சோழவந்தான் பகுதியே பரபரப்பாக உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications